ZEE5 ‘காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் உலகளவிலான டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது!

113

இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5, ஜூலை 7, 2023 அன்று ‘கதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் உலகளவிலான டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்தது. எம். முத்தையா இயக்கத்தில் உருவான இந்த உணர்ச்சிகரமான தமிழ் அதிரடி திரைப்படத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, கே.பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரேணுகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் பெற்ற மகத்தான வெற்றியை தொடர்ந்து, மதங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் சமூகக் கோட்பாடுகளை மீறும் உற்சாகமளிக்கும் கிராமியக் கதைக்களத்தைக் கொண்ட இந்த திரைப்படம், ZEE5 இல் 7 ஜூலை 2023 அன்று தமிழில் வெளியாகிறது.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் [ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்], ஆகியோரின் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படம், . மன உறுதி கொண்ட புரட்சிகரமான சிறைக்கைதியான காதர் பாஷா என்ற முத்துராமலிங்கத்தை , [ஆர்யா] சந்திக்கப் பயணம் மேற்கொள்ளும் தமிழ்செல்வி [சித்தி இத்னானி] என்ற இளம் பெண்ணின் வாழ்க்கைப்பயணத்தை விவரிக்கிறது மற்றும் தமிழ்செல்வி ஆகியோரிடையிலேயான உறவின் மர்மமான தன்மை, காதர் மற்றும் வெடிகுண்டு வெயிலன் (தமிழ்) ஆகியோருக்கு இடையே நிலவும் ஆழமான கடும் வெறுப்போடு கூடிய பகைமை மற்றும் அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் அபாயகரமான வலிமை மிக்க எதிரிகளை எதிர்க்கும் அவனது போராட்டத்தை காட்சிப்படுத்துகிறது.

ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறினார் , “காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் காதல், மீண்டெழும் திறன் மற்றும் உறுதிப்பாடு ஆகிய ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அழுத்தமான கதைக்களத்தைக் கொண்ட திரைப்படமாகும். , மேலும் இந்தத் திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து எங்கள் தளத்தில் ஸ்ட்ரீம் செய்வதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சிந்தனையைத் தூண்டும் உள்ளடக்கத்தை காட்சிப்படுத்தி வழங்குவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம் அவை எங்கள் பார்வையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு அதிகாரத்தையும் வழங்கும். இந்தத் திரைப்படம் கதையை அழகாக எடுத்துச் சொல்லும் கலைக்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது மற்றும் அத்தகைய தாக்கத்தை உருவாக்க அத்தியாவசியமான நடிப்ப்த் திறனை வெளிப்படுத்தும் நட்சத்திற்றங்களை உள்ளடக்கியது. ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’ திரைப்படம் நம் பார்வையாளர்களின் மத்தியில் ஒரு நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

இயக்குனர் எம்.முத்தையா தெரிவித்ததாவது, “‘காதர் பாஷா என்றமுத்துராமலிங்கம்’ காதல், தியாகம், மீண்டெழும் திறனாற்றல் ஆகிய உணர்வுகளை ஆராயும் ஒரு உணர்ச்சிபூர்வமான கதை. தாங்கள் வழக்கமாக பின்பற்றிவரும் மதக் கோட்பாடுகளை பார்வையாளர்கள் மாற்றியமைக்கவேண்டிய இடையறாத தேவை இப்போது இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, சமூக-மதக் கோட்பாடுகளைத் தகர்த்தெறியும் ஒரு திரைப்படமாக இதை உருவாகியிருக்கும் அதே வேளையில் எனது பார்வையாளர்களுக்கான உணர்ச்சிகரமான அடிதடி நிறைந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் உருவாக்கவும் நாங்கள் கடும் முயற்சி எடுத்துள்ளோம். பெரிய திரையில் இதை ஒரு வெற்றிப்படமாக உருவாக்க உதவிய ஒரு மிகப்பெரிய திறமைவாய்ந்த நடிகர்கள் மற்றும் படக் குழுவினருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புக் கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் மேலும் டிஜிட்டல் தளத்திலும் இந்தத் படம் ஒரு மாபெரும் வரவேற்பை பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” .

ஆர்யா கூறினார் , “காதர் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியது என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அனுபவமாக அமைந்தது. அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அனைவரும் எங்கள் படத்தைப் காணவேண்டும் என்றும் , கதரின் தடுமாற்றமில்லாத அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் நீதிக்கான அவரது தேடலில் இருந்து அவர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்றும்.”

ZEE5 இல் ‘காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தை ஜூலை 7 முதல்’ காணத் தயாராகுங்கள்!