சால்மோன் திரை விமர்சனம்

177

தமிழ் சினிமாவில் விஜய் யேசுதாஸ், ராஜிவ் கோவிந்த பிள்ளை, செரித் பலாப்பா, ஷியாஸ் கரீம், பஷீர் பாஷி, ஜபீர் முகமத் உட்பட பலரது நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் சல்மோன்.

படத்தின் கதைக்களம் :

படத்தின் நாயகன் விஜய் யேசுதாஸுக்கு சால்மோன் மீனை சாப்பிட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அப்படி இருக்கையில் ஒரு நாள் அவருடைய மனைவி பிறந்தநாள் விருந்தாக சால்மோன் மீனை சமைத்துக் கொடுக்கிறார். ஆனால் அந்த மீனை தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேருவதற்காக விஷத்தை வைத்து கொடுக்கிறார்.

எப்படியோ இந்த விஷயம் அறியும் ஹீரோ அந்த மீனை சாப்பிடாமல் தப்பித்து விடுகிறார். அவரது மனைவியும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ தொடங்குகிறார். இப்படியான நிலையில் நடக்கும் அமானுஷ்யங்களுக்கு மத்தியில் ஒரு பேயின் ஆசையை நிறைவேற்றி வைக்க ஹீரோயின் எடுக்கும் முயற்சிதான் இந்த சால்மோன் படத்தின் மீதி கதைக்களம்.

முழுக்க முழுக்க 3d கேமராவில் உருவாக்கி உள்ள முதல் திரைப்படமாக இது சால்மோன் திரைப்படம் வெளியாகி உள்ளது. மாறுபட்ட கதை, கதாபாத்திரங்கள் என படத்தின் இயக்குனர் ஷாலில் கல்லூர் இந்த படத்தை திறம்பட இயக்கி உள்ளார்.

படத்தின் பின்னணி இசை திகிலூட்ட ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

சித் ஸ்ரீ ராம் குரலில் உருவாகியுள்ள மெது மெதுவாக என்ற பாடல் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் சால்மோன் திரைப்படம் உங்களை ரசிக்க வைக்கும்.