கண்ணூர், பினராயில் நடைபெற்ற #பினராயிபெருமா கலை மற்றும் கலாச்சார விழாவில் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. கேரளாவின் மாண்புமிகு முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்கள், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. முஹம்மது ரியாஸ், மாண்புமிகு சபாநாயகர் திரு. A. N. ஷம்சீர், அன்புக்குரிய ஆசிஃப் அலி, மற்றும் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ‘தி இந்து’ திரு.ராம் அவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
கேரள மக்களின் அன்பும், அரவணைப்பும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த மறக்க முடியாத நினைவுக்களுக்கு மிக்க நன்றி 😊