சாய் தன்ஷிகாவின் புதிய படம் ஜுன் மாதம் அந்தமானில் துவங்குகிறது

ஸ்ரீ சாய் சினிமாஸ் சார்பில் சாய் தன்ஷிகா
கதாநாயகியாக நடிக்கும் படத்தை
திரைப்படக் கல்லூரி மாணவர் அசோக்குமார் இயக்குகிறார்.

ஒருவர் ஆழ்மனதில் நிலவும் அமைதி மற்றும் வன்முறையை மனோதத்துவ ரீதியாக அனுகும் கதையே இப்படம் என்கிறார் இயக்குனர் அசோக்குமார்.
சாய் தன்ஷிகா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சாய் தன்ஷிகாவுடன் மெல்வின்,”விக்ரம் வேதா” பிரேம்குமார், கீதா கைலாசம், சிம்ரன் குப்தா, “அமரன்” பால், “சுவீஸ்” சரண், சனாகான், அனீஸ், சினன்,வேம்பரசன், OTC.செந்தில், நமச்சிவாயம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசை -மேத்தியு ஜாப்
தயாரிப்பு மேற்பார்வை-
வெங்கட் ராமன்
மக்கள் தொடர்பு – வெங்கட்

ஒளிப்பதிவு, தயாரிப்பு – T.தாமோதரன்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – அசோக் குமார்

அந்தமான் மற்றும் அதன் சுற்றியுள்ள தீவுகளான ஜாலி பாய், டிகிலிபூர் ஆகிய இடங்களில் ஒரே கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment