”உதவும் மனிதம்” சிறப்புவிழா: 300 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

சென்னை, “இயன்றதை செய்வோம்! இணைந்தே செய்வோம்!” என்ற தத்துவத்தில் செயல்பட்டு வரும் “உதவும் மனிதம்” அறக்கட்டளை, அதன் சிறப்புவிழாவை நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிளாக் பாண்டி தலைமையில் சென்னையில் வெகுவிமர்சையாக நடத்தியது.

இந்த விழாவில் மொத்தம் 300 பயனாளிகள் பன்முக நலத்திட்ட உதவிகளை பெற்றனர். நிகழ்வின் முக்கிய நன்கொடையாளர் இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு. தியாகி ஐயா ஆவார்.

வழங்கப்பட்ட முக்கிய நலத்திட்ட உதவிகள்:

100 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் எழுதும் உபகரணங்கள்

80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000 நிதியுதவி மற்றும் உணவுப்பொருட்கள்

30 பார்வையற்ற நபர்களுக்கு வியாபார உபகரணங்கள் (ரூ.3000 மதிப்பு)

20 பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு பவர் கண்ணாடிகள்

6 திருநங்கைகளுக்கு ரூ.2000 மதிப்புள்ள உணவுப் பொருட்கள்

3 ஏழை மாணவர்களுக்கு தலா ரூ.3000 கல்வி உதவித் தொகை

2 தையல் எந்திரங்கள் தனித்துயர் பெண்களுக்கு

1 இஸ்திரி பெட்டி சலவை தொழிலாளிக்கு

1 மாணவிக்கு வில்வித்தை பயிற்சி உதவித் தொகை (ரூ.5000)

1 மாணவி தீபலஷ்மிக்கு கல்வி உதவி (ரூ.5000)

300 பேருக்கு அன்னதானம்

முக்கிய ஆதரவாளர்கள்:
Parveen Travels, Sri Krishna Sweets, Apollo Hospitals, Impala Biryani (Trichy), Go Well Trust, Optical Expressions, Greenstar AC, Midhu Industries (Coimbatore), OSB Chat

விழாவில் கலந்து சிறப்பித்த முக்கிய பிரபலங்கள்:
திரு. அருணாச்சலம் (வெ. நீதிபதி), வருமான வரி அலுவலர் ரமேஷ், ஸ்டன்ட் இயக்குநர் பவர்பாண்டியன்
திரைப்பட நட்சத்திரங்கள்: ராதாரவி, தலைவாசல் விஜய், வையாபுரி, டானி போப், சமபத்ராம், விசித்திரன், பழனியப்பன், படையப்பா ரமேஷ், வெற்றிவேல்ராஜா, சின்னத்திரை இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள்
சமூக ஆர்வலர்கள்: சரண்யா ஜெயக்குமார் (குழந்தைகள் நலன்), நமீதா (திருநங்கை நலன்)

வாழ்த்திய பிரபலங்கள் (வீடியோவின் மூலம்):
பெரோஸ்கான், சிங்கம்புலி, பொன்வன்னன், KPY பாலா, சாம்ஸ், ஜீவா, சுவாமிநாதன், சின்ராசு, ஸ்ரீ சசிகுமார், ஞான சஞ்சீவனம், கிருஷ்ணன் (கல்வித்துறை), சுரேஷ் சந்திரா, அப்துல்நாசர் மற்றும் ஊடக நண்பர்கள்

இவ்விழாவின் வெற்றிக்காக பங்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் “உதவும் மனிதம்” அமைப்பின் சார்பாக இதயப்பூர்வமான நன்றிகள்.

அன்பே நிலையானது!
– பிளாக் பாண்டி
நடிகர் & சமூக செயற்பாட்டாளர்
உதவும் மனிதம் அமைப்பு

Comments (0)
Add Comment