ஈஷா குறித்து அவதூறு… பணம் பறிக்க திட்டமிடுகிறாரா யாமினி?

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யாமினி என்பவர் தனது கணவர் நரேந்தர் உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா யோகா மையம் குறித்து ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்தும் சில கருத்துக்களை செய்தியாளர்களுக்கு பேட்டியாக அளித்தார்.
இதுகுறித்து ஈஷா யோகா மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் யாமினி பேசியது குறித்தும் யாமினி குறித்தும் தங்கள் தரப்பு விளக்கத்தை பதிவிட்டு இருந்தனர்.
அதில் யாமினி ஒரு தன்னார்வலராக ஈஷா ஹோம் ஸ்கூலில் ஆசிரியராக பணிபுரிந்ததாகவும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பணிபுரிந்தார். பணியின் போது அவர் மீது குற்றச்சாட்டுகளை எழுந்ததால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.அவர் கூறும் கூற்றுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.குழந்தைகளின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். எங்கள் குழந்தைகள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை சமரசம் செய்யும் எந்தவொரு நடத்தைக்கும் கடுமையான சகிப்புத்தன்மையற்ற கொள்கையை நாங்கள் பராமரிக்கிறோம்.
அவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்கனவே ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து முழுமையான ஆய்வு செய்து பள்ளியின் பல்வேறு அம்சங்களைப் பாராட்டி கிளீன் சிட் வழங்கியுள்ளது.ஈஷா ஹோம் ஸ்கூல் யாமினி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பதிவிடப்பட்டிருந்தது.
இவ்வளவு நாள் இல்லாமல் தற்போது திடீரென யாமினி தனது கணவருடன் கொடுத்த பேட்டி எதற்காக நடந்தது என்ற சர்ச்சை திடீரென எழுந்துள்ளது.
இந்நிலையில் யாமினி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது யாமினி கணவர் ஹைதராபாத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது 2014 ஆம் ஆண்டு தனது மூத்த மகனை ஈஷா பள்ளியில் ஹோம் ஸ்கூலில் சேர்த்துள்ளார் கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் தனது படிப்பை அங்கு முடித்துவிட்டு வெளியே சென்று விட்டார். 2020 ஆம் ஆண்டு தனது இளைய மகனுக்கு அங்கு சீட் கேட்டுள்ளார் அப்போது தகுதியின் அடிப்படையில் யாமினி இளைய மகனுக்கு சீட்டு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஈஷாவில் தன்னார்வலராக இருந்த யாமினி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் அவருடைய நடவடிக்கைகள் சரியில்லாததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
யாமினி என் மகன் எட்டு ஆண்டுகள் ஈஷா ஹோம் ஸ்கூலில் படித்து படிப்பை முழுமையாக நிறைவு செய்து சென்ற பின்பு அவரும் ஆசிரியராக அங்கு பணிபுரிந்து அதன் பின்பு வெளியே சென்று விட்டு தற்போது அவதூறு கிளப்புவதில் நோக்கம் என்ன என்பது புரியவில்லை. ஒருவேளை பாலியல் தொந்தரவு அவரது மகனுக்கு இருந்திருந்தால் பள்ளிப்படிப்பை ஈஷா ஹோம் ஸ்கூலில் முழுமையாக எப்படி நிறைவு செய்திருக்க முடியும். அதேபோல இதுபோன்ற ஒரு விஷயத்தை அவர் பணியில் இருந்த போது ஒரு முறை கூட நிர்வாகத்திற்கு கூறியது இல்லை என்று கூறப்படுகிறது. யாமினி கூறுவது தற்போதைய பரபரப்புக்கு கட்டுக் கதைகள் என்பது போல இருப்பதாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment