Corporart 2024 – சென்னை வர்த்தக மையத்தில் பல திறமைகள் ஜொலித்த நிகழ்ச்சி.

கலை இயக்குனர் உமேஷ் ஜெ.குமார் மற்றும் நிகழ்ச்சி இயக்குனர் ராகிணி முரளிதரன் ஆகியோரால் சென்னையில் நிறுவப்பட்டு இன்று தென்னிந்தியாவின் முன்னோடி “நிகழ்ச்சி மேலாண்மை ” நிறுவனமாகத் திகழ்கிறது “Rennaisance”.

பெரு நிகழ்ச்சிகள், தயாரிப்புகள், வணிகப் பொருள் தயாரிப்பு அறிமுக நிகழ்ச்சிகள், பெரு நிறுவனங்களின் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் – குடும்ப தின நிகழ்ச்சிகள் , விருது மற்றும் இசை வெளியீட்டு விழாக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை, 20 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனமான “Renaissance”, இம்முறை “Corporart 2024 ” என்னும் நிகழ்ச்சியின் மூலமாக 277 வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் உட்பட்ட – நடனம், குறும்படம், பாட்டு, நிழற்படக் கலை, அழகுப் போட்டி போன்ற பல திறமைகளுக்கான போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியது.

சென்னை முழுவதும் 4000-துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, அவர்களில் 8 தொழிற் பூங்காக்களிலிருந்து 2000 ஊழியர்கள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இவற்றில் பல விளம்பர நிகழ்ச்சிகள், முதற்கட்ட போட்டி சுற்றுகள், அரை இறுதி மற்றும் இறுதிச்சுற்று ஆகியவை “சென்னை வர்த்தக மையத்தில்” ஆகஸ்டு 31ஆம் தேதி நடத்தப்பட்டன.

பல நடுவர்கள் போட்டியாளர்களைப் பாராட்டும் போது corporate வேலைகள் செய்யும் போதும் தன் கலைத் திறமைகளை விட்டுக்கொடுக்காமல் மிக நேர்த்தியாக வெளிப்படுத்திய விதத்தை குறிப்பிட்டு பெருமிதம் கொண்டனர்.

பற்பல நிகழ்ச்சிகளின் நடுவர்களாக இருந்தவர்கள்:

இசைக்குழு:
பின்னணிப் பாடகர்கள் – நிவாஸ் மற்றும் ஆனந்த் அரவிந்தாக்ஷன்.
இசை அமைப்பாளர் – லிடியன் நாதஸ்வரம் மற்றும் மார்ஷல் ராபின்சன்.

குறும்படம்:
இயக்குனர்கள் – விக்னேஷ் கார்த்திக், பாலாஜி வேணுகோபால், செல்லா அய்யாவு.

புகைப்படம்:
ஒளிப்பதிவாளர் – ரிச்சர்ட் எம். நாதன்.
நிழற்படக் கலைஞர் / தொழிலதிபர் – அருண் டைட்டன்.

அழகுப் போட்டி:
நடிகர் – கணேஷ் வெங்கட்ராமன்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் / நடிகர் – பாவனா,
நிகழ்ச்சி தொகுப்பாளர் / நடிகர் – ரம்யா.
மருத்துவர் / Mrs Chennai- பிரியங்கா கே. சோழன் .

பாரம்பரிய நடனம்-
நடன இயக்குனர் நரேந்திரா,
நடன இயக்குனர்கள் பாலகுருநாதன் – அபர்ணா ஷர்மா.

கர்நாடக இசை:
கர்நாடக இசைக்கலைஞர் / பின்னணிப்பாடகர் கார்த்திகா வைத்தியநாதன்.
கர்நாடக இசைப் பாடகர்கள் –
பரத் சுந்தர், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்.

Rap பாட்டு:
பாடகர் தேவன்.
பாடகர்/ இசையமைப்பாளர் – மரியா ரோ வின்சென்ட்,
பாடகர் மற்றும் Rap இசைக்கலைஞர் – கே.ஜே. அய்யனார்.

திரைப்பட இசை- சந்தோஷ் நாராயணன்.
பின்னணி பாடகர்கள் – சுனிதா சாரதி, ஹரிஷ் ராகவேந்திரா.

நடனம் (தனி):
நடன இயக்குனர் – ஜானி மாஸ்டர், , “5th element”இல் இருந்து பிரவீன்,
நடன இயக்குனர் ரகு.

நடனம் (குழு):
நடன இயக்குனர் – ஜான் பிரிட்டோ.
நடன கலைஞர் / நடிகை – இனியா.
ஒளிப்பட இயக்குனர் / எடிட்டர் – கென் ராய்சன்

வெற்றியாளர்களின் பட்டியல்:

இசைக்குழு:
ஷ்ரவன் நாராயணன் மற்றும் குழுவினர் – சிட்டி வங்கி – முதல் பரிசு
வைப் செக் 1, 2 – BNP. Paribas – இரண்டாம் பரிசு.
ஜெர்ரி ஹனியல் மற்றும் குழுவினர் – டைகர் அனாலிடிக்ஸ் – மூன்றாம் பரிசு
ஷ்ரவன் நாராயணன் – சிட்டி வங்கி – சிறப்பு பரிசு
ஜனனி – BNP Paribas – சிறப்பு பரிசு.

புகைப்பட போட்டி:
கோவர்தனன்.ஏ – Rennaisance – முதல் பரிசு
கௌதம்.ஆர் – Tag India பிரைவேட் லிமிடெட் – இரண்டாம் பரிசு.
அருண் பிரசாத். வி – CGI மூன்றாம் பரிசு
பிரவீன் ஜான்சன் – Relx இந்தியா பிரைவேட் லிமிடெட் – சிறப்பு பரிசு

குறும்படம்:
வர்ஷா.எம் – Access healthcare Company – முதல் பரிசு.
திலீப் – Williamslea – இரண்டாம் பரிசு.
சதீஷ் ஜேக்கப் – வெஸ்டாஸ் மூன்றாம் பரிசு.
கௌதம் ராம் – RR Donnelley India Outsource Pvt Ltd – சிறப்பு பரிசு
வர்ஷினி – HCL – சிறப்பு பரிசு
மார்ட்டின் பிலிப்ஸ் – ரெல்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் – சிறப்பு பரிசு

அழகுப் போட்டி:
டினிட் டேனி – ஜிஃப்போ – முதல் பரிசு
நிவேதிதா ஐயர் டி.ஜி. – பேங்க் ஆப் அமெரிக்கா – இரண்டாம் பரிசு.
யோகராஜ் பாலு – ஆர்ஆர் டோனெலி – மூன்றாம் பரிசு
ரமேஷ் – டோப்பான் மெரில் டெக்னாலஜி சர்வீசஸ் – எம்.எஸ். கார்ப்போரார்ட்.
இலக்கியா பழனிசாமி – ZIFO – MS. – Corporart.

பாரம்பரிய இசை வாய்ப்பாட்டு:
தருண் குமார் தனசேகரன் – குவால்காம் – முதல் பரிசு
விஸ்வநாத் ஜி – கோடக் மகேந்திரா வங்கி – முதல் பரிசு
பூர்ணஸ்ரீ ஹரிதாஸ் – இன்போசிஸ் – இரண்டாம் பரிசு
சுப்ரியா – லேட்டென்ட் வியூ அனாலிடிக்ஸ் லிமிடெட் – மூன்றாம் பரிசு
தீப்தி – பார்க்லேஸ் – சிறப்பு பரிசு

பாரம்பரிய நடனம்:
அபிராமி பி – விப்ரோ – முதல் பரிசு
ஸ்ரீவித்யா வி – Drivestream இந்தியா பிரைவேட் லிமிடெட் – இரண்டாம் பரிசு
சிந்து – நோவெல் பைனான்சியல் சொல்யூஷன்ஸ் – மூன்றாம் பரிசு
சாஷ்வதா ஐஸ்வர்யா – Drivestream இந்தியா பிரைவேட் லிமிடெட் – மூன்றாம் பரிசு
துர்கா ராமகிருஷ்ணன் – Lexis Nexis – சிறப்பு பரிசு.

ராப் பாட்டு:
யூகி பிரவீன் – ASP. RCM சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – முதல் பரிசு
மைதிலி எஸ் – பார்க்லேஸ் – இரண்டாம் பரிசு
ப்ரிஜு கைலாஷ் – பார்க்லேஸ் – மூன்றாம் பரிசு

மேற்கத்திய பாட்டு:
ஹேமா நந்தினி – Lennox International Technology Center – முதல் பரிசு
ஆகாஷ் ஜோசப் – Freshworks – இரண்டாம் பரிசு
தீப்தி – பார்க்லேஸ் – மூன்றாம் பரிசு

திரை இசைப் பாடல்:
விஸ்வநாத் ஜி – கோடக் மகேந்திரா வங்கி – முதல் பரிசு
சுஷாந்த் பி எம் – லேட்டென்ட் வியூ அனாலிடிக்ஸ் லிமிடெட் – இரண்டாம் பரிசு
கோமதி – Thoughtworks – இரண்டாம் பரிசு
பூர்ணஸ்ரீ ஹரிதாஸ் – இன்போசிஸ் – மூன்றாம் பரிசு
தருண் குமார் தனசேகரன் – Qualcomm – சிறப்பு பரிசு

நடனம் (தனி):
சுஜித் – விப்ரோ – முதல் பரிசு
நவீன்ராஜ் எம் – LTIMindtree – இரண்டாம் பரிசு
ராஜ்குமார் – சிட்டி வங்கி – இரண்டாம் பரிசு
ஸ்டெபி வெரோனிகா – பேங்க் ஆப் அமெரிக்கா – மூன்றாம் பரிசு
சதீஷ் ஏ – TANCAM – தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையம் – சிறப்பு பரிசு

நடனம் (குழு) :

பிரேம்நாத் மதியழகன் மற்றும் குழுவினர் – RR Donnelley India Outsource Pvt Ltd – முதல் பரிசு
கெவின் மற்றும் குழுவினர் – இன்போசிஸ் – முதல் பரிசு
அரவிந்தராஜ் மற்றும் குழுவினர்- ஹெக்ஸாவேர் – இரண்டாம் பரிசு
“பிரெஷ்பூம்” – அஜித் – பிரெஷ்வொர்க்ஸ் – மூன்றாம் பரிசு
மேக்னா மைத்ரா – Zifo ஆர்&டி சொல்யூஷன்ஸ் – சிறப்பு பரிசு
அஜ்ரா நச்ரீன் – Amazon Development center- சிறப்பு பரிசு

Corporart 2024 – Rennaisance நடத்தும் பெரும் பிரபலங்கள் பங்கு பெரும் விருது நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் போலவே, போட்டியாளர்களுக்கு சிறந்த அனுபவம் கொடுக்கும் வகையில் மேடை-ஒளி-ஒலி வடிவமைப்பு அமைந்திருந்தது. முக்கோண மற்றும் நட்சத்திர வடிவிலான மேடைகள் போட்டியாளர்களுக்கு அவரவரின் பணியிடங்களில் தேவைப்படும் வலிமை, மற்றும் சமநோக்கு நிலையையும் நினைவு படுத்தியது.
நேரத் தட்டுப்பாடு இருந்தாலும் மரத் தச்சர்கள், மேடை வடிவமைப்பாளர்கள், மற்றும் பிற தொழிலாளர்கள் அனைவரின் கடின உழைப்பால் 24 மணி நேரங்களுக்குள் மேடை அமைப்பு தயாரான சாதனை நிகழ்ந்தது.

Corporartஇன் இலச்சினையான “ஷிவ்”, ஒவ்வொரு போட்டியாளரின் வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது.
“ஷிவ்” கோப்பையின் வடிவமைப்பு மடிக்கணினி, அலுவலக அடையாள அட்டை அணிந்து கொண்டு- போட்டியாளர்களின் திறமையை பிரதிபலிக்கும் விதமாக பாடகரின் ஒலிவாங்கி, நடனக்கலைஞரின் காலணி, நிழற்படம் மற்றும் குறும்பட கலைஞரின் கேமரா, மாடல்களின் பாங்கில் ஆடை என்று அனைவரின் நன்மதிப்பையும் பெற்றது.
பெருநிறுவன வட்டாரங்களில் வலம் வரும் அனைத்து கலைத்திறனும் ஒன்று திரண்ட ஆரோக்கியமான ஒரு சூழல் இது போல வேறு எங்கும் கண்டிருக்க முடியாது.

போட்டி நிகழும் மையத்தில், கிடைத்த சிறிய இடங்களிலெல்லாம் தங்கள் அணியுடன் பயிற்சி செய்த நிமிடங்கள் தங்களது கல்லூரி நாட்களின் கலை நிகழச்சிகளை நண்பர்களுடன் பகிர்ந்து அனுபவித்த இனிய தருணங்களை நினைவு படுத்தியதாக போட்டியாளர்கள் உணர்ந்தார்கள்.
Rennaisance சார்பாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments (0)
Add Comment