தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கம்.

சென்னை மற்றும் பல மாவட்டங்களிலிருந்து நடிகர் நடிகைகள்,
நாடக நடிகர் நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

காலை 9மணிக்கு செயற்குழு கூட்டம் நடந்தது.

காலை 10 மணி அளவில் தமிழ் தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமாகியது.

உறுப்பினர்கள் லதா, ரோகிணி, கோவைசரளா, லலிதாகுமாரி, பசி சத்யா, சத்யப்ரியா, சோனியா இவர்கள் குத்து விளக்கேற்றிய பின் நிகழ்ச்சி ஆரம்பமானது.

வரவேற்புரை: பொது செயலாளர் விஷால்.

ஆண்டறிக்கை: துணை தலைவர் கருணாஸ்:

புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த வங்கி லோன் கன்சல்டண்ட் ஜெயந்தி கிரிதரன்,
ஆடிட்டர் ஶ்ரீராம்,
சட்ட ஆலோசகர் கிருஷ்ணா ரவீந்திரன், சார்லஸ் டார்வின்,
இலவச மெடிக்கல் செக்கப் செய்து கொடுத்த அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் சந்திரசேகர் , ‘சங்கர் ஐ-கேர்’ இலவச கண் முகாம் நடத்திய டாக்டர் விஜய் சங்கர்,
PRO ஜான்சன்
ஆகியோருக்கு மேடையில் பொன்னாடை போத்தி மரியாதை செய்யப் பட்டது.

புதிய கட்டிடம் நிதி திரட்டும் நடவடிக்கை குறித்து: பொருளாளர் கார்த்தி:
இதில்,
சங்க புதிய கட்டிடம் கட்டுவதற்கு உதவி அளித்த கமல்ஹாசன்,
இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
சன் ஸ்டார் ஹோட்டல்ஸ் அண்ட் எஸ்டேட்ஸ்,
நெப்போலியன்,
சிவகார்த்திக்கேயன்,
தனுஷ் மற்றும் கார்த்தி
ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.

முக்கிய நிகழ்வாக :
நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் அவர் முகம் பொரிக்கப் பட்ட தங்க டாலர் வழங்கப்பட்டது.
டெல்லி விஜயகுமாரி பேசும்போது,
கடந்த நடிகர் சங்க நிர்வாகிகள் என்னை மதிக்கவில்லை. இப்பொழுது உள்ள பிள்ளைகள் என்னை மதித்து வீட்டிற்கு வந்து அன்பு காட்டினர் என்றும்,
இப்பொழுது இருக்கும் முதலமைச்சர் எல்லாவற்றையும் தெரிந்திருப்பவர்.. அவர் நடிகர் சங்கத்தை மனதில் வைத்து கொள்ள அன்பாய் கோரிக்கை வைக்கிறேன் என்றார்.
டெல்லி கணேஷ் பேசும் போது:
நேரம் காலம் பார்க்காமல் எவ்வளவோ நல்லது செய்யும் இந்த அணியே மீண்டும் தொடர ஆசைப் படுகிறேன். மீண்டும் உங்களையே நாங்கள் ஜெயிக்க வைப்போம், என்றார்.
மேலும், மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அழகு, முத்துக்காளை, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி, எம்.ஆர்.சோலைவள்ளி, எம்.காமராஜ், பிரசாத் வி.சி. ராஜேந்திரன், எம். ஏ.பிரகாஷ் ஆகிய பத்து பேருக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் அவர் முகம் பொரிக்கப் பட்ட தங்க டாலர் வழங்கப்பட்டது.

# மீ-டு – நடிகை மற்றும் சினிமா தொழிலில் வேலை செய்யும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானால் அதற்கு நாங்கள் இருக்கிறோம் என்று தோள் கொடுப்பதற்காக ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு நிறைவேற்ற பட்டது. அப்படி பட்ட பிரச்சனையில் சிக்குபவர்கள் தைரியமாக புகார் கொடுங்கள் என்று இதன் அமைப்பு பொறுப்பாளர் ரோகிணி பேசினார்.

பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றத் தடை என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

கட்டிடம் கட்டி முடிக்கும் வரை அடுத்த மூன்றாண்டுகள் இப்பொழுது இருக்கிற சங்க நிர்வாகிகளே பணி தொடரலாம் என்று ஏகமனதாக பொது குழுவில் ஆதரவு தெரிவித்தனர்.

#சிறப்புரை: தலைவர் நாசர்
#நன்றியுரை: துணை தலைவர் பூச்சி எஸ் முருகன்

முன்னதாக காலை 8மணி முதல் அனைவருக்கும் ‘இலவச மெடிக்கல் செக்கப்’ அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பாகவும், ‘சங்கர் ஐ-கேர்’ கண் இலவச முகாம் நடந்தது.

தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
அனைவருக்கும் பிரியாணி பரிமாரப் பட்டது.

Comments (0)
Add Comment