நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவரான மருத்துவர் பொன்னையா வனமூர்த்தி, பக்கவாதம், தலையில் அடிபடுவதால் ஏற்படும் காயம் மற்றும் பிற மோசமான நரம்பியல் நோய்களுக்கான சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றத்தின் மருத்துவச் சிறப்புகளைக் குறித்து எடுத்துரைத்தார்.
டாக்டர் எம்ஜியார் பல்கலைக்கழகத்தின் தூணை வேந்தரான மருத்துவர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி, நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் 5 ஆம் ஆண்டு கருத்தரங்கினைத் தொடங்கி வைத்தார். நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் செயலாளரான மருத்துவர் K. ஸ்ரீதர், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, முதல்முறையாக அமெரிக்காவின் நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டியுடன் இணைவதைப் பற்றிய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 சர்வதேச நரம்பியல் வல்லுநர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். இதில், நரம்பியல் சிகிச்சையில் மேம்பட்ட கண்காணிப்பு குறித்த முன் கூட்டமைப்புப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக நடக்கும், நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் கருத்தரங்கில், உலகம் முழுவதிலுமிருந்து 400 புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கருத்தரங்கு, “வளர்ந்து வரும் போக்குகள், விரிவடையும் வாய்ப்புகள், மாறும் கண்ணோட்டங்கள்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.