கிருஷ்னகிரி நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு அதிரடியாக செயலாற்றும் கிருஷ்னகிரி திமுக மாவட்ட செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்
திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு -புதுச்சேரி பத்து இடங்களை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு தாக்கல் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள்.
மக்களவைத் தேர்தல் 2024:
திமுக கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள்
திமுக போட்டியிடும் தொகுதிகள்
வட சென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
காஞ்சிபுரம் ( தனி)
அரக்கோணம்
வேலூர்
தருமபுரி
திருவண்ணாமலை
சேலம்
கள்ளக்குறிச்சி
நீலகிரி (தனி)
பொள்ளாச்சி
கோவை
தஞ்சாவூர்
தூத்துக்குடி
தென்காசி (தனி)
ஸ்ரீபெரம்புதூர்
பெரம்பலூர்
தேனி
ஈரோடு
ஆரணி
காங்கிரஸ்
திருவள்ளூர் (தனி) (காங்)
கடலூர் (காங்)
மயிலாடுதுறை (காங்)
சிவகங்கை (காங்)
திருநெல்வேலி (காங்)
கிருஷ்ணகிரி (காங்)
கரூர் (காங்)
விருதுநகர் (காங்)
கன்னியாகுமரி (காங்)
புதுச்சேரி (காங்)
விசிக
சிதம்பரம் (விசிக)
விழுப்புரம் (விசிக)
மார்க்சிஸ்ட்
மதுரை (சிபிஎம்)
திண்டுக்கல் (சிபிஎம்)
இ.கம்யூனிஸ்ட்
திருப்பூர் (சிபிஐ)
நாகப்பட்டினம் (சிபிஐ)
நாமக்கல் (கொமதேக)
திருச்சி (மதிமுக)
ராமநாதபுரம் (ஐயூஎம்எல்)
திமுக கூட்டணி கட்சி தொகுதிகள் சார்ப்பாக போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும். எந்த வகையிலும் பகுதி வாரியாக வாக்குகள் குறைய கூடாது ,அப்படி குறைந்தால் அதற்கு அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு என்றும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படும் யென் திமுக தலைவரும் தமிழ் நாடு முதல் அமைச்சருமான முக ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களிடையே நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் காங்கிரஸ் நீங்கலாக அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்க பட்டு தேர்தல் பணிகள் தீவரப்படுத்த பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலக பந்தல் அமைப்பதற்கான பணிகளைமாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் துவக்கி வைத்தார் தேர்தல் பணிகளை தீவீர படுத்தியுள்ளார். அதே போன்று, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் ( WAR ROOM ) திறக்க பட்டுள்ளது.
கட்டளை மைய திறப்பு விழாவில் மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், திறந்து வைத்து தேர்தல் வீயூக வெற்றி குறித்து தடாலடியாக பல கருத்துகளை தெரிவித்து உள்ளார்.
கிருஷ்னகிரி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஜெயபிரகாஷ்,பாஜக கூட்டணி சார்பில் ட.நரசிம்மனனும், களம் காண்கிறார்கள்.
மும்முனை போட்டி உருவாகியுள்ளது