இறுதிப் போருக்கு பின் தொலைந்து போன தமிழர்கள் அல்லது இதுவரை என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இருக்கும் தமிழர்கள் திரும்பி வருவார்களா, வரமாட்டார்களா ?என்ற ஆய்வை செய்வதற்காக, இலங்கைக்குள் ஐ.நா போக வேண்டுமா? வேண்டாமா? என்ற போராட்டத்தோடு கதைகளம் துவங்குகிறது.இந்த இறுதி போருக்கு முன்னால் தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளின் வாழ்க்கை போராட்டம் எப்படி இருந்தது என்பதை இந்த படம் எடுத்து விளக்குகிறது.
இந்த படம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை உலக மத்தியில் வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் என்கிறார் இயக்குனர்.
இப்படத்தை அதிரை தமீம் அன்சாரி இயக்க, மெய் மறந்தேன், சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, வாடி ராசாத்தி முதலிய படங்களை தயாரித்த C.G.M பிக்சர்ஸ் மணிவண்ணன் தயாரிக்கின்றார்.
கதையின் பாத்திரங்களாக ஜெகநாதன், முருகன், பகலவன், குட்டி ராதிகா போன்ற புதுமுகங்களுடன் சாக்ஷி அகர்வால், மைம் கோபி, ரஞ்சன், கீர்த்தனா, விஷ்வா, சதீஷ் மாஸ்டர், சஞ்சய் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவு – வீரா
தயரிப்பு – மணிவண்ணன்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – அதிரை தமீம் அன்சாரி
இதன் படப்பிடிப்பு செங்கல்பட்டு, வையம்பட்டி போன்ற இடங்களில் 20 நாட்களாக முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய போராட்டத்தின் மத்தியில் சவால்களுடன் நடைபெற்று வருகிறது.