நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும்

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி- ஓபிஎஸ் உறுதி

திமுகவை வீழ்த்துவதற்கும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் ஆக்குவதற்காகவும் தான் நிபந்தனையற்ற ,நிர்பந்தமற்ற கூட்டணி உருவாகியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள் தேர்தல் பரப்புரையின் போது வீடு வீடாக சென்று சிறுபான்மை மக்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என விருப்பம் தெரிவித்துள்ளோம்*

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி,

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி- ஓபிஎஸ் உறுதி*

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திரவிடுதியில் ((lee merudian))வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி,வி கே சிங், எல் முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக உரிமை மீட்பு குழு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அதிமுக உரிமை மீட்பு குழுவில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு 11 மணிக்கு தொடங்கிய கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்றது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசியது,

மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி விகேசிங் கடந்த முறை வந்த போது என்னால் சந்திக்க முடியவில்லை.
அண்ணாமலை அவர்கள் என்னை அழைத்த போது திருச்சியில் இருந்ததால் என்னால் வர முடியவில்லை. இன்று மீண்டும் மத்திய அமைச்சர்கள் வருகிறார் என அண்ணாமலை அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். அதனால் மாயவரம் மீட்டிங்கை வேறு நிர்வாகி வைத்து நடத்த சொல்லிவிட்டு வந்தேன்.

தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்து ஆலோசனை நடத்தினோம்.மற்றபடி தொகுதிகள் குறித்து இறுதியான முடி எடுத்த பிறகு தெரிவிக்கிறேன். அமமுக போட்டியிடும் சின்னங்கள் தொடர்பாக எந்த நிர்பந்தங்களும் இல்லை ,அச்சுறுத்தலும் இல்லை.எங்களுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னம் வேண்டுமென உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் மனு தாக்கல் செய்திருக்கிறோம் குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைத்து விடும் என நம்புகிறோம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாநில கட்சி,வளர்ந்து வரக்கூடிய கட்சி,எங்கள் கட்சி நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதைத் தான் விரும்புகிறார்கள்.பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகளை குறிப்பிட்ட பட்டியலை அண்ணாமலை அவர்களிடம் கொடுத்துள்ளோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் நிறைய கட்சிகள் உள்ளது அமமுகவிற்கு சம முக்கியத்துவம் கொடுப்பார்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு,

இது ஒன்றும் சம்மந்தி வீடு இல்லை நாங்கள் ஒரு கூட்டணி.எங்களுடைய இலக்கு திமுக என்கிற தீய சக்தியை இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் முறியடிக்க வேண்டும். மீண்டும் மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடி அவர்க ள் வருவது மூலம் தமிழ்நாட்டுக்கு நல்ல திட்டங்களை பெற்று தர முடியும் என்ற நம்பிக்கையில் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம்.

இதில் யார் பெரியவர் யார் சின்னவர் என்ற போட்டி எங்களிடம் இல்லை. குறிப்பாக என்னிடம் இல்லை. எங்களுடைய ஒரே இலக்கு இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தருவது தான்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இங்கு இருப்பவர்கள் குடியுரிமையை பறிப்பதற்கான சட்டம் கிடையாது. அகதிகளாக வந்திருந்தவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதற்கான சட்டம்.இதனை தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள்.சிறுபான்மை மக்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் குழப்புகிறார்கள்.இதில் என்ன உண்மை உள்ளது என்று அவர்களுக்கு தெரியும். வேறு நாடுகளில் மதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற இஸ்லாமிய நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது பற்றி தன் திருத்த சட்டம். இதன் மூலம் இந்தியாவில் இருப்பவர்களுக்கு குடியுரிமை ரத்து செய்வதற்கான சட்டம் கிடையாது.மக்களை குழப்ப பார்க்கிறார்கள் மக்கள் தெளிவாக உள்ளனர்.தேர்தல் நேரத்தில் நாங்கள் தமிழகம் முழுவதும் குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும்,இந்த சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தின் மூலம் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம்.

பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பிரதமராக யார் வர வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியை நோக்கி தான் பிரச்சாரங்கள் இருக்கும் அதை நோக்கி தான் மக்கள் வாக்களிப்பார்கள்.வெற்றிபெற போகின்ற nda கூட்டணிக்கு பாதிப்பு இருக்காது. பல மாநிலங்களில் மீண்டும் பாஜக சிறப்பான வெற்றி பெறும். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு நல்ல வெற்றி பெற்று தருவது மூலம் தமிழ்நாடுக்கு தேவையான திட்டங்களை திமுக வாக்குறுதிகளில் சொல்லி ஏமாற்றுவதால் மக்கள் ஏமாந்து உள்ளனர்.

தமிழக மக்களுக்கு அரசின் திட்டங்களை பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கையில் தான் இந்த கூட்டணி அமைகிறது நிச்சயமாக செய்து காட்டுவோம்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமான திட்டங்களை குறிப்பா ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டம் ஸ்டெர்லைட் திட்டங்கள் எல்லாம் மத்திய அரசு தமிழ்நாட்டில் மீது திணித்தாள் என் வாழ்நாள் முழுவதும் அவர்களை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்போது அவர்களோடு செல்ல முடியாது என்ற நிலைமை இருக்கும் என்று தான் சொன்னேன்.

மத்திய அரசு இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. நீதிமன்றம் சுதந்திரமாக அதில் தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். நமது விவசாயிகள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் சூழல் இல்லை குறிப்பாக தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசின் திட்டங்களை வழங்கி இருக்கிறது. மேலும் திட்டங்களை வழங்குவார்கள்.

டிடிவி தினகரன் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மாட்டான் என்பது உங்களுக்கு தெரியும்.நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை எந்த நிர்பந்தமும் எனக்கு கிடையாது. தீய சக்திகளையும் துரோக சக்திகளையும் வீழ்த்துவதற்கான சந்தர்ப்பம் இது.

 

கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் பேசியது,

இரண்டாம் கட்டமாக கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றது. மெகா கூட்டணி அமைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதில் தற்காலிகமாகத் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ஒருங்கிணைப்பாளர் என்பதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்றார்.சின்னம் குறித்த சாதக பாதகங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும்.ஒரே இடத்தை இரண்டு மூன்று கூட்டணி கட்சிகள் கேட்பதற்கான வாய்ப்பு உள்ளது.அது குறித்து பேசி சரி செய்து போட்டியிடுவோம்.

விரைவில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து அறிவிப்போம்.

சுபாஷ் சந்திர போஸ் ராஜவேலன்

Editor Subashchandrabose Rajavelan

 

cookerElection 2024Opsttv Symboltwo leaf
Comments (0)
Add Comment