கடந்த அரசாங்கம் எப்போதும் பெண்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்ததில்லை.பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்
டெல்லி பூசாவில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் “வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பயனாளிகளிடம் கலந்துரையாடினார்,தொடர்ந்து நமோ ட்ரோன் சகோதரிகளின் விவசாய ட்ரோன் செயல் விளக்கங்களை பார்வையிட்டார்
நாடு முழுவதும் 11 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த நமோ ட்ரோன் சகோதரிகள் ஒரே நேரத்தில் ட்ரோன் செயல்விளக்கத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ட்ரோன்களையும் பிரதமர் வழங்கினார்
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,
பெண்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கினால் தான் ஒரு நாடு முன்னேற முடியும்.கடந்த அரசாங்கம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் முன்னுரிமை வழங்கவில்லை
நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு சிறிதளவு ஆதரவு கிடைத்தால், அவர்கள் மற்றவர்களுக்கு ஆதரவாக மாற முடியும் என்று நான் உணர்கிறேன்
பாஜக 2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களின் வாழ்க்கைச் சுழற்சியின் ஒவ்வொரு பகுதிக்கும் திட்டங்களை வகுத்து வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது
செங்கோட்டையில் இருந்து பெண்கள் அதிகாரம் பற்றி நான் பேசும்போதெல்லாம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் என்னை கேலி செய்து ,அவமதிப்பு செய்தன
.கடந்த அரசாங்கம் எப்போதும் பெண்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்ததில்லை.மோடியின் உணர்வுகளும் திட்டங்களும் அடிமட்ட வாழ்க்கை அனுபவங்களிலிருந்து வெளிப்பட்டவை.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மகளிர் சுயஉதவி குழுக்கள் விரிவடைந்த விதம் ஆய்வுக்குரியது.
இந்த மகளிர் சுயஉதவி குழுக்கள் இந்தியாவில் பெண்கள் அதிகாரம் பெறுவதில் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளன.
மேம்பட்ட இணைப்பு காரணமாக, கிராமங்களில் வசிக்கும் பெண்கள் இப்போது நகரங்களில் தங்கள் பொருட்களை விற்க முடிகிறது.
நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், எங்கள் மூன்றாவது பதவிக்காலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் ஒரு புதிய புதிய அத்தியாயம் எழுதப்படும்-என பிரதமர் பேசியுள்ளார்