“நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவருடனும் ‘டைகர் 3’ மூலமாக நாங்கள் தீபாவளியை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்” ; தங்களது முதல் தீபாவளி வெளியீடு குறித்து சல்மான்-கத்ரீனா

இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகரமான வெள்ளித்திரை ஜோடியான சல்மான் கான்-கத்ரீனா கைப் இருவருமே ஒன்றாக இணைந்து நடித்த படங்கள் எதுவும் இதுவரை தீபாவளியில் வெளியானதே இல்லை. ‘டைகர் 3’ மூலமாக இந்த தீபாவளியில் இந்த பெருமைமிகு ஜோடி இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள சினிமா காதலர்களை உற்சாகமாக பொழுதுபோக்க செய்ய இருக்கின்றனர்.

சல்மான் கூறும்போது, “ஒரு தீபாவளி ரிலீஸை பெறுவது என்பது எனக்கு எப்போதுமே ஸ்பெஷலானது. காரணம் எப்போதுமே பண்டிகைகள் எனக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுத்து ஆசீர்வதித்துள்ள பல நினைவுகள் என்னிடம் இருக்கின்றன. நானும் கத்ரீனாவும் இணைந்த நடித்த படங்கள் எதுவும் இதுவரை தீபாவளியில் வெளியானதில்லை என்பது நிச்சயமாக ஆச்சர்யமான விஷயம் தான்.. அந்தவகையில் ‘டைகர் 3’ எங்களது முதல் தீபாவளி ரிலீஸாக இருக்கும். சக நடிகர்களாக நாங்கள் இருவருமே அதிக மக்களால் விரும்பப்படும் படங்களில் நடித்துள்ளோம். அதனால் ‘டைகர் 3’ மூலமாக அவர்களுக்கு சிறந்த தீபாவளியை கொடுக்க முடிந்தால் அதுவே எங்களுக்கு மிகுந்த பெருமையாக இருக்கும்” என்கிறார்.

கத்ரீனா கூறும்போது, “தீமைக்கு எதிராக பெறும் வெற்றியை குறித்து நான் நடித்துள்ள ‘டைகர் 3’ ரிலீசாகிறது என்பதால் இந்த தீபாவளி எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. மேலும் சல்மான் கானுடன் நான் இணைந்து நடித்து முதல்முறையாக தீபாவளியில் வெளியாகும் படமும் இதுதான். சல்மான் கானும் நானும் ஒவ்வொருவரையும் உற்சாக பொழுதுபோக்க செய்வதற்காக காத்திருப்பதுடன் இந்த தீபாவளி பண்டிகையில் மகிழ்ச்சியையும் பரவசத்தையும் சேர்த்தே தர இருக்கிறோம்” என்கிறார்.

மேலும் அவர் கூறும்போது, “எங்களது படத்தின் ரிலீஸ் மூலமாக நாட்டில் உள்ள ஒவ்வொருவருடனும் தீபாவளியை கொண்டாட இருக்கிறோம் என்பது போன்றே இந்த வருடம் உணர்கிறேன். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அற்புத தீபாவளி பரிசை ‘டைகர் 3’ மூலம் கொடுக்கிறோம் என்றும் நம்புகிறேன்” என்கிறார்.

மகிழ்ச்சி, ஏக்கம் எல்லாம் நிறைந்ததது என்பதால் இந்த இரண்டு சூப்பர்ஸ்டார்களின் இதயங்களிலும் தீபாவளி ஒரு ஸ்பெஷலான இடத்தை பிடித்திருக்கிறது.

சல்மான் கூறும்போது, “என்னை பொறுத்தவரை தீபாவளி என்பது எப்போதுமே மக்களை ஒன்றாக இணைக்கின்ற, குடும்பங்களை ஒன்றிணைக்கும் பண்டிகையாகத்தான் இருந்திருக்கிறது. இந்த தீபாவளியை என் மக்களுடன் சேர்ந்து கொண்டாட எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த தீபாவளியில் எனது மொத்த குடும்பத்துடனும் சேர்ந்து ‘டைகர் 3’யை பார்க்க போகிறேன் என்பதுடன் ஒவ்வொருவருமே இந்தப்படத்தை திரையில் பார்க்கும்போது முழுவதுமாக ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன்” என்கிறார்.

கத்ரீனா கூறும்போது, “தீபாவளி எப்போதுமே எல்லோருக்கும் ஒரு கொண்டாட்டமான பண்டிகையாகவே இருந்திருக்கிறது. என்னை பொறுத்துவரை தீபாவளி என்பது மக்களின் ஒற்றுமை, அன்பு, ஒளி, நமது குடும்பங்களையும் நட்புகளையும் கொண்டாடும் பண்டிகையாகவே உணர்கிறேன். மேலும் நல்லது எப்போதும் கெட்டதை வென்றே தீரும் என்கிற உண்மையையும் உணர்த்துகிறது” என்கிறார்.

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைகர் 3’ ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளி ரிலீஸாக வரும் நவ-12ஆம் தேதி ஞாயிறன்று வெளியாக இருக்கிறது.

 

Comments (0)
Add Comment