என் கனவுகளை வளர்த்தும், என் கலைக்கு வடிவம் தந்தும் இருந்த இந்த மண்ணின் — தமிழ்நாட்டின் அரசால் — அங்கீகரிக்கப்படும் உயரிய விருது இது. இதை நான் எப்போதும் பணிவுடனும் பெருமையுடனும் சுமந்து செல்லும் ஒரு மாபெரும் மரியாதையாகப் பார்க்கிறேன்.
இந்தப் பயணம் ஒருபோதும் என்னுடையதாய் மட்டும் இருந்ததில்லை. இந்தப் படங்கள், துணிச்சல், நம்பிக்கை, சினிமாவுக்கான அன்பு, அர்த்தமுள்ள கதைகள் மற்றும் உண்மையின் மீது கொண்ட காதல் ஆகியவற்றின் கூட்டு விளைச்சல்.
தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், தமிழக துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், மதிப்பிற்குரிய நடுவர் குழுவுக்கும், என் இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என்னுடன் பயணித்த சக நடிகர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
என் ரசிகர்களே — என் நிலையான பலமே — என்னை உணர்ந்து, ஆதரித்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் என் கையைப் பிடித்துக் கொண்டிருந்ததற்கு நன்றி. உங்கள் அன்பே என் தீப்பொறி.
வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாக உழைப்பேன், இன்னும் ஆழமாக கனவு காண்பேன், நேர்மையும் துணிச்சலும் கொண்ட கதைகளையே தேர்வு செய்வேன் என்று உ றுதி கூறுகிறேன்.
இது வெறும் இலக்கு அல்ல.
நன்றி மறக்காமல் நிலைத்திருக்கவும், துணிச்சலுடன் இருக்கவும், தொடர்ந்து முன்னேறவும் என்னுள் நினைவூட்டும் ஒரு அழைப்பே.
அன்புடன்
யோகி பாபு