23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்

தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிஸியேஷன் பவுண்டேஷன் சார்பில், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது.

இந்த திரைப்பட விழாவின் முக்கிய அங்கமான தமிழ் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் 12 திரைப்படங்கள் தேர்வாகியிருந்தது.

விருது வழங்கும் நிகழ்ச்சி திரைப்பட விழாவின் இறுதி நாளில் நடைப்பெற்றது.

ராமின் இயக்கத்தில் வெளிவந்த ‘பறந்து போ’ திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வுக்குழுவினரால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. விழாவில் இயக்குநர் ராம், டிஸ்னி + ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் திரு. ப்ரதீப் மில்ராய் மற்றும் ஜி கே எஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் திரு. கருப்புசாமி அவர்களுடன் விருதை பெற்றுக்கொண்டார்.

Comments (0)
Add Comment