உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புகளை விரிவுபடுத்த ‘சீரிஸ் ஏ’ சுற்றில் ₹14 கோடி நிதி திரட்டியது ‘ரைட்4பாஸ்’

சென்னை, டிசம்பர் 16, 2025: கோயம்புத்தூரைச் சேர்ந்த உயர்தர செல்லப்பிராணி உணவு உற்பத்தி நிறுவனமான ‘பெட் பிரகால்ப் இந்தியா பிரைவேட் லிமிடெட்’, தனது தொழிற் சின்னம் ‘ரைட்4பாஸ்’-க்காக ரூ.14 கோடி நிதியைத் திரட்டியுள்ளது.

உயர் நிகர மதிப்பு கொண்ட தனிநபர் முதலீட்டாளர்கள் (HNIs) அடங்கிய குழுவிடமிருந்து, ‘சீரிஸ் ஏ’ சுற்றில் இந்த நிதி வெற்றிகரமாகத் திரட்டப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பொதுவாக, ஆரம்ப மற்றும் நடுத்தர நிலையில் உள்ள செல்லப்பிராணி உணவு உற்பத்தி நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவிலேயே நிதி திரட்டும் சூழலில், தற்போது திரட்டப்பட்டுள்ள இந்தத் தொகை ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இது நிறுவனத்தின் எதிர்காலத்தின் மீதுள்ள நம்பிக்கையையும், இத்துறையில் முதலீட்டாளர்களுக்குள்ள ஆர்வத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

அறிவியல் மற்றும் இயற்கையான முறையிலான செல்லப்பிராணி உணவுத் தயாரிப்புகளை உருவாக்கி, இந்தியா முழுவதும் உள்ள செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு, அந்தந்த உயிரினங்களுக்கு ஏற்ற உயர்தர உணவை எளிதாகக் கிடைக்கச் செய்வதே நிறுவனத்தின் நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதில் தற்போது கிடைத்துள்ள இந்த முதலீடு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த முதலீட்டு ஒப்பந்தத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ‘த்ரீ பின்ஸ் கேபிடல் லிமிடெட்’ ஆலோசகராகச் செயல்பட்டது.

நிதியின் பயன்பாடு: திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு, உற்பத்தி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நிறுவனத்தின் உள் திறன்களை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்களை நியமிக்கவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

செல்லப்பிராணிகளின் வயது மற்றும் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற புதிய வகையான ஊட்டச்சத்து தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், இந்தியச் சந்தையில் தனது விநியோகத்தை விரிவுபடுத்தவும் இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேவேளையில், சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்வதற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

‘பெட் பிரகால்ப் இந்தியா பிரைவேட் லிமிடெட்’, இந்தத் தொழிலின் ஆராய்ச்சி, புதுமை மற்றும் உற்பத்திக்கான முதுகெலும்பாகச் செயல்படுகிறது. அதேவேளையில், ‘ரைட்4பாஸ்’ நுகர்வோரை நேரடியாகச் சென்றடையும் பிராண்டாக இயங்குகிறது.

இவை இரண்டும் இணைந்து, முழுமையான சத்துக்கள் நிறைந்த இயற்கை உணவையும், வர்த்தக ரீதியான உணவுகளுக்கே உரிய பாதுகாப்பு மற்றும் கையாளும் வசதியையும் ஒன்றிணைக்கின்றன. இதன் மூலம், இந்தியச் செல்லப்பிராணி உணவுத் துறையில் நிலவும் ஒரு முக்கியத் தேவையை இவை பூர்த்தி செய்கின்றன.

சந்தை நிலவரம்: இந்தியாவில் தற்போது 4 கோடிக்கும் அதிகமான வளர்ப்புப் பிராணிகள் உள்ளன. இந்தியாவின் மொத்த செல்லப்பிராணி உணவுச் சந்தை சுமார் ரூ.5,000 கோடி மதிப்புடையதாக உள்ளது. இச்சந்தை ஆண்டுக்கு சராசரியாக 20% வளர்ச்சியடைந்து வருகிறது.

இதுகுறித்து ‘ரைட்4பாஸ்’ நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குநருமான திரு. தனு ராய் கூறியதாவது:

“இந்தியாவில் செல்லப்பிராணிகளுக்கான ஊட்டச்சத்து தரத்தை உயர்த்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். அந்தப் பயணத்தில், தற்போது திரட்டப்பட்டுள்ள இந்த நிதி ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. ரைட்4பாஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அந்தந்த உயிரினங்களுக்கு ஏற்ற முழுமையான சத்துக்கள் நிறைந்த உணவின் நன்மைகளையும், நவீன காலத்திற்கேற்ற ‘டிரை ஃபுட்’ வசதியையும் நாங்கள் ஒன்றிணைக்கிறோம். எங்களின் தயாரிப்புகள் இங்கிலாந்தைச் சேர்ந்த கால்நடை ஊட்டச்சத்து நிபுணர்களால், அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டவை. பல ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குப் பிறகே இவை உருவாக்கப்பட்டுள்ளன. செல்லப்பிராணிகளின் செரிமான மண்டலத்திற்கு ஏற்ற வகையில், முழுமையான உணவுப் பொருட்களைக் கொண்டு இவை தயாரிக்கப்படுவதால், அவற்றின் உடல்நலம் மேம்படுவதோடு, ஆயுட்காலமும் அதிகரிக்கின்றது. இந்தியாவிலிருந்து உருவாகி, உலக அளவில் நம்பிக்கைக்குரிய ஒரு இயற்கை செல்லப்பிராணி உணவுப் பொருளாக உருவெடுப்பதே ரைட்4பாஸ் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையாகும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ‘ரைட்4பாஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனரும், இயக்குநருமான திரு. சமீர் அச்சன் மேலும் கூறியதாவது:

“முதலீட்டாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள இந்த வலுவான நம்பிக்கை, எங்களின் தனித்துவமான அணுகுமுறை, பிரத்தியேகத் தொழில்நுட்பம், சந்தைப்படுத்தும் உத்தி மற்றும் நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். இந்த ‘சீரிஸ் ஏ’ நிதியானது, நிறுவனத்தை விரைவாக விரிவுபடுத்தவும், புதிய வகை தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், சர்வதேச சந்தைகளை நோக்கி நகரவும் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. அதேவேளையில் வெளிப்படைத்தன்மை, ஆராய்ச்சி சார்ந்த புதுமை மற்றும் செல்லப்பிராணிகளின் உண்மையான ஆரோக்கியம் ஆகியவற்றில் நாங்கள் கொண்டுள்ள உறுதியான கவனத்திலிருந்து மாறாமல் இந்தப் பயணத்தைத் தொடர்வோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

மற்ற செல்லப்பிராணி உணவு நிறுவனங்களிலிருந்து ‘ரைட்4பாஸ்’ எதில் மாறுபடுகிறது என்றால், அதன் அடிப்படை தயாரிப்பு முறை மற்றும் அணுகுமுறையாகும். சந்தையில் உள்ள வழக்கமான பிராண்டுகள், அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட பொருட்கள், செயற்கை ரசாயனங்கள் மற்றும் பொதுவான தயாரிப்பு முறைகளை அதிகம் நம்பியுள்ளன. ஆனால், ‘ரைட்4பாஸ்’ அந்தந்த உயிரினங்களுக்கு ஏற்ற, முழுமையான இயற்கை உணவை அறிவியல் பூர்வமாக உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவற்றின் செரிமான மண்டலம், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் மற்றும் நீண்ட கால உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்தத் தயாரிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த வேறுபாட்டின் மிக முக்கியக் காரணம், ரைட்4பாஸ் நிறுவனத்தின் ‘மல்டி ஃபேக்டர் கன்ட்ரோல்டு டிஹைட்ரேஷன்’ தொழில்நுட்பமாகும். காப்புரிமைக்காகக் காத்திருக்கும் இந்தத் தொழில்நுட்பம், உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள், பயோ-கிடைப்புத்தன்மை மற்றும் இயற்கைத்தன்மை மாறாமல் இருப்பதை உறுதி செய்கிறது. நிறுவனம் தயாரிப்புகளை உருவாக்க கடுமையான, அறிவியல் பூர்வமான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கால்நடை ஊட்டச்சத்து நிபுணர்களுடன் இணைந்து செயல்படுவதுடன், சர்வதேச சுயாதீன ஆராய்ச்சிகளால் சரிபார்க்கப்பட்ட உணவுச் சோதனைகளுக்கும் இவை உட்படுத்தப்பட்டுள்ளன.

‘ரைட்4பாஸ்’ நிறுவனம் குறித்து:
கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘பெட் பிரகால்ப் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற செல்லப்பிராணி உணவு உற்பத்தி நிறுவனம், ‘ரைட்4பாஸ்’ தொழிற் சின்னம் நிர்வகித்து வருகிறது. அறிவியல் பூர்வமான, இயற்கையான மற்றும் உயர்தர தயாரிப்புகள் மூலம், இந்தியாவின் வர்த்தக ரீதியான செல்லப்பிராணி உணவுச் சந்தையை மாற்றி அமைப்பதே ரைட்4பாஸ் நிறுவனத்தின் உறுதியான நோக்கமாகும். வெளிப்படைத்தன்மை, ஆராய்ச்சி சார்ந்த புதுமை மற்றும் முழுமையான ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் ரைட்4பாஸ், இந்தியாவின் மிகத் தனித்துவமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் உயர்தர செல்லப்பிராணி உணவு தொழிற் சின்னளில் ஒன்றாகும்.

வலுவான உற்பத்தித் திறன் மற்றும் வளர்ந்து வரும் விநியோகத் தொடரைக் கொண்டுள்ள இந்நிறுவனம், தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், புதிய வகை தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், சர்வதேச சந்தைகளில் நுழையவும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அனுபவம் வாய்ந்த நிறுவனர்கள் குழு மற்றும் உத்திசார் முதலீட்டாளர்களின் ஆதரவுடன், வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் செல்லப்பிராணி பராமரிப்புத் துறையில், ரைட்4பாஸ் ஒரு முன்னோடியாக உருவெடுத்து வருகிறது.

Comments (0)
Add Comment