பெப்ஸ்-ன் புதிய ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’ சென்னையின் புறநகரான குன்றத்தூரில் கோலாகல திறப்பு விழா

சென்னை, தமிழ்நாடு, 13 டிசம்பர் 2025: இந்தியாவின் முன்னணி ஸ்பிரிங் மெத்தை மற்றும் தூக்கத் தீர்வுகள் நிறுவனமான பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குன்றத்தூரில் தனது புதிய ‘பெப்ஸ் கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’ விற்பனை மையத்தை திறந்திருக்கிறது. இதன் வழியாக சென்னை மாநகரில் தனது சில்லறை வர்த்தக செயல்பாட்டை இந்நிறுவனம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய விற்பனை நிலையமானது, மாநகரில் ஏற்கனவே உள்ள பெப்ஸ் கிளைகளுடன் இணைந்து செயல்படும். வளர்ந்து வரும் சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கும், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பிரீமியம் தூக்கத் தீர்வுகளை உறுதி செய்யும் தனது தயாரிப்புகள் எளிதில் கிடைக்குமாறு வழங்க வேண்டும் என்ற இந்நிறுவனத்தின் நோக்கத்தை இது பிரதிபலிக்கிறது.
இந்த புதிய விற்பனை மையத்தை பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் திரு. S. ராஜேஷ் அவர்கள் திறந்து வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழக அரசின் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை (MS&ME) அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர், சென்னையில் பெப்ஸ் நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியைப் பாராட்டியதோடு, புதிய விற்பனையகத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
நவீன வசதிகளுடன் ஒரு அனுபவ மையம் என்ற வடிவமைப்புடன் குன்றத்தூரில் நிறுவப்பட்டுள்ள ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’, பெப்ஸ் நிறுவனத்தின் அனைத்து வகையான மெத்தைகள் (ஸ்பிரிங், ஃபோம் மற்றும் கயிறு), தலையணைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் உதிரிபாகங்களை ஒரே இடத்தில் பார்வையிட வாடிக்கையாளர்களுக்கு, சிறந்த தளத்தை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள், பெப்ஸ்-ன் தயாரிப்புகளான மெத்தைகள் மற்றும் தலையணைகளின் தன்மைகளை நேரடியாக உணர்ந்து, ஒப்பிட்டுப் பார்த்து, தங்கள் உடல்நலம் மற்றும் தூக்கத் தேவைகளுக்கேற்ப சரியான தயாரிப்பை தேர்ந்தெடுக்க இங்கு வழிகாட்டப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் சௌகரியம் மற்றும் நவீன வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு நான்கு மேம்பட்ட தயாரிப்புகளை பெப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. பெப்ஸ் கம்ஃபோர்ட் (Comfort), பெப்ஸ் சுப்ரீம் (Supreme), பெப்ஸ் ரெஸ்டோனிக் மெமரி ஃபோம் (Restonic Memory Foam) மற்றும் பெப்ஸ் சுப்பீரியர் ஸ்பிரிங் ரேஞ்ச் (Superior Spring Range) ஆகிய இவை, சிறந்த உடல் ஆதரவு, சொகுசான உறக்கம் மற்றும் நீண்ட கால உழைப்பை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழாவில் பேசிய பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் திரு. S. ராஜேஷ் அவர்கள் கூறியதாவது: “சென்னை எப்போதும் எங்களுக்கு மிக முக்கியமான மற்றும் நம்பிக்கையான சந்தையாகத் திகழ்கிறது. இங்குத் தரமான மற்றும் பிரீமியம் தூக்கத் தீர்வுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனாலேயே இம்மாநகரில் எங்கள் இருப்பையும், செயற்பரப்பின் வீச்செல்லையையும் நாங்கள் மேலும் விரிவுபடுத்தி வருகிறோம். குன்றத்தூரில் அமைந்துள்ள இந்த புதிய ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’ வாடிக்கையாளர்களுக்கு நேர்த்தியான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையை வழங்கும். ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள உறுப்பினர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை உறுதி செய்யும் வகையில், புதுமையான மற்றும் நம்பகமான தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.”

சுமார் 800 சதுர அடியில் அமைந்துள்ள இந்த பிரத்யேக, அனுபவ ரீதியான ஸ்லீப் ஸ்டுடியோ பெப்ஸ்-ன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்களைப் பற்றிய தகவலைப் பெற்று, அதை நன்கு புரிந்துகொண்டு, சிறப்பம்சங்களை ஒப்பிட்டு, தங்களுக்கு உகந்த சரியான முடிவை எடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்தியா முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மல்டி-பிராண்ட் விற்பனை நிலையங்கள் மற்றும் 92 பிரத்யேக ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’களுடன் செயல்பட்டு வரும் பெப்ஸ், தமிழ்நாட்டை மிக முக்கிய வளர்ச்சிச் சந்தையாகக் கருதி தனது சில்லறை வர்த்தக விரிவாக்கப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது.

Comments (0)
Add Comment