பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய்-ன் கைவண்ணத்தில் உருவாகும் ‘தேரே இஷ்க் மே’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த காதல் கதையான ‘தேரே இஷ்க் மே’ ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது.
‘தேரே இஷ்க் மே’ இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 28 அன்று வெளியாக உள்ளது. காதல் ஒரு காவியமாக உயர்கிறது.
ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. டீஸர் மற்றும் மனதை வருடும் இசையின் வலுவான வரவேற்புக்கு பிறகு, ‘தேரே இஷ்க் மே’ படத்தின் இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில், இந்த டிரெய்லர் சங்கர் மற்றும் முக்தியின் யதார்த்தமான, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் கணிக்க முடியாத உலகத்திற்குள் ஆழமாக அழைத்து செல்கிறது. இது காரணம், காலம் மற்றும் விதியை மீறிய ஒரு காதல் கதை.
இந்த புதிய காட்சிகள், காதல், இழப்பு மற்றும் மீட்பு போன்ற படத்தின் முக்கிய கருப்பொருள்களை பற்றிய ஒரு அழுத்தமான பார்வையை வழங்குகின்றன. டீஸர் மற்றும் பாடல்கள் சுட்டிக்காட்டியதை விட இருண்ட, மேலும் ஆழமான கதைக்களத்தை இது வெளிப்படுத்துகிறது. ஆனந்த் L ராயின் தனித்துவமான கதைசொல்லும் பாணி, ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவின் எழுத்தின் உணர்ச்சிப்பூர்வமான ஆழத்துடன் இணைந்து, ஒரு சக்திவாய்ந்த சினிமா பயணத்திற்கு களம் அமைக்கிறது.
இந்த உலகின் இதயத்தில் AR ரஹ்மானின் இசை உள்ளது. இது ஏற்கனவே ரசிகர்களிடையே ஒரு உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, படத்தின் வெளியீட்டிற்கான மேடையை அமைத்துள்ளது.
குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.