பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் இருந்து AR ரஹ்மானின் மேஜிக்கில் ‘அவளிடம் சொல்’ பாடல் வெளியாகி உள்ளது!

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் உருவாகி உள்ள தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28, 2025 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.

ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ஓ காதலே’ ஏற்கனவே ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து, பல்வேறு இசை தளங்களை ஆட்கொண்ட நிலையில், இப்போது T-சீரீஸ் மற்றும் கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள இரண்டாவது பாடல் ‘அவளிடம் சொல்’ ரசிகர்களின் உணர்ச்சிகளை மேலும் ஆழமாக தொடுகிறது.

இந்த பாடல் இசை வித்தகன் AR ரஹ்மான் இசையில் உருவாகி உள்ளது. இதன் உணர்ச்சி நிறைந்த வரிகளை மஷூக் ரஹ்மான் எழுதியுள்ளார். AR அமீன் மற்றும் ஜொனிதா காந்தி ஆகியோரின் குரல் சேர்க்கையுடன், ரஹ்மானின் தனித்துவமான பாணியில் இதயம் தொடும் இசை வெளிப்படுகிறது. பாடலுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் இருவரின் தீவிரமான காதல் காட்சிகளை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக க்ரிதி சனோன் நடித்துள்ள முக்தி என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சி பயணத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

இசை வித்தகன் AR ரஹ்மான் கூறியதாவது, “இந்த பாடல், ‘அவளிடம் சொல்’, ஹிமாச்சலுக்கு சென்றபோது கங்கை நதியில் பிரதிபலிக்கும் மலைகளை பார்த்து கிடைத்த ஒரு உணர்வில் இருந்து பிறந்தது. அந்த இயற்கையின் அமைதியிலிருந்து, பியானோ, ஸ்ட்ரிங்ஸ் மற்றும் புதிய குரல் நிதேஷ் ஆகியோருடன் ஒரு எளிமையான ஆன்மீகமான இசை உருவானது. இதை நாம் உருவாக்கியபோது உணர்ந்ததை மக்கள் கேட்டும் உணர வேண்டும் என்று நம்புகிறேன்.”

இயக்குனர் ஆனந்த் L ராய் கூறியதாவது, “இசை என்பது மிக வலிமையான மாயம்… அந்த மாயத்தை நேரில் உருவாக்கும் அற்புதமான மந்திரவாதி AR ரஹ்மான். அவருடன் பணிபுரிவது எனக்கு சிறப்பாக இருந்தது. ‘அவளிடம் சொல்’ நமது இதயத்திலிருந்து வந்த மற்றொரு ரத்தினம்.”

தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது, “‘அவளிடம் சொல்’ என்பது ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் இதயத்திலுள்ள சொல்லப்படாத உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. அது உண்மையான காதலை பற்றியது. பசுமையானது, இயல்பானது, மனிதனின் உணர்வுகளைத் தொட்டது. AR ரஹ்மானின் ஆன்மீக இசை, மஷூக் ரஹ்மானின் வரிகள், அமீனின் இனிய குரல் மற்றும் ஆனந்த் L ராயின் உணர்ச்சிமிக்க காட்சிகளுடன் சேர்ந்து, இந்த பாடல் படத்தின் உணர்ச்சி மையத்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.”

AR. ரஹ்மானின் இசை, ஹிமான்ஷுவின் வலிமையான வரிகள் மற்றும் ஆனந்த் L ராயின் உணர்ச்சிகரமான காட்சிகள் இணைந்து, ஒவ்வொரு வெளியீட்டிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்துகின்றன. இது ஆண்டின் மிகவும் ஆன்மீகமான சினிமா மற்றும் இசை அனுபவங்களில் ஒன்றாக இருக்கும் என்று உறுதியாகிறது.

குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment