பயம் உன்னை விடாது..! திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் 70ஆவது ஆண்டு தீபாவளி விழாவில் ‘பயம் உன்னை விடாது…!’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு தீபாவளி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மூத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திரைப்பட இயக்குனர் சரவணன் சுப்பையா, நடிகர்கள் சௌந்தரராஜா, தங்கதுரை, மௌரி ஆகியோர் இணைந்து ‘பயம் உன்னை விடாது…!’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

எஸ். கே. என்டேர்டைன்மெண்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம் தயாரிப்பில், கி. மு. இளஞ்செழியன் இயக்கத்தில் கதிரவன், நந்தினி கிருஷ்ணன், கே. எஸ். ஐஸ்வர்யா, பேபி இ.ஜெ. மதிவதனி, விஜய் கண்ணன், கணபதி கருணாநிதி, அருண் பிரசாத், மணிகண்டராஜன், கதிர்காமன், சித்ரா, இளஞ்செழியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப் படத்திற்கான இசையை தயா. ரத்தினம் அமைத்துள்ளார், ஒளிப்பதிவு முரளி தங்க வேலு , படத்தொகுப்பு ஈஸ்வரமூர்த்தி குமார், கலை அன்புசித்ரன் ஆகியோர் மேற்கொள்ள விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

Comments (0)
Add Comment