நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் ‘ஸ்டீபன்’ உண்மைக்கு நெருக்கமான கதை!

தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட தொடர் கொலையாளியை ஒரு மனநல மருத்துவர் மதிப்பிடுகிறார். இதன் மூலம் அதிர்ச்சி, வஞ்சகம் மற்றும் உளவியலை கையாளுதல் ஆகியவற்றின் வலையை அவிழ்க்கிறார். கொலையாளி உண்மையிலேயே குற்றவாளியா அல்லது இருண்ட விளையாட்டில் பாதிக்கப்பட்ட மற்றொருவரா என்ற கேள்வி எழுகிறது. அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள இந்த ‘ஸ்டீபன்’ படம் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது.

இதுகுறித்து இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்துகொண்டதாவது, “‘ஸ்டீபன்’ கதை ஒரு அமைதியான, கால்குலேட்டட் தொடர் கொலையாளியைப் பற்றியது. அவர் அமைதியற்ற தனிப்பட்ட ரகசியங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து கோமதி சங்கர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநராக இந்தப் படம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. முடிந்தளவு உண்மைக்கு நெருக்கமாகவும் அக்கறையுடனும் இந்தக் கதையை எடுத்துள்ளோம். இதுபோன்ற ஜானரில் கதை சொல்ல அனுமதித்த நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு நன்றி. எங்களுடைய படத்தை உலகம் முழுவதும் உள்ள 190 நாடுகளை சேர்ந்த பார்வையாளர்கள் பார்ப்பார்கள் என்பதை நினைக்கும்போதே மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

எழுத்தாளர் மற்றும் நடிகர் கோமதி ஷங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “குற்றத்திற்கு அப்பால் அதன் பின்னால் இருக்கும் மனிதனைப் பார்க்கும் ஒரு படமாக ‘ஸ்டீபன்’ உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரம் அன்பானவராக அதே சமயம் பாதிப்படைந்த ஒருவராகவும் இருக்கும். அதே நேரத்தில், அவரது இருள் எப்போதும் அப்படியே இருக்கும். ஒரு சீரியல் கில்லரின் நிழலை உண்மைத்தன்மையுடன் கொண்டு வருவது சவாலானதாக இருந்தது. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இந்தக் கதை வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

Comments (0)
Add Comment