தமிழ் நாட்டிலிருந்து பொறியாளர்களை தேர்வு செய்து திறன் வாய்ந்தவர்களாக மாற்றி உலக அளவில் பல திட்டங்களில் பணியமர்த்த இருப்பதாக அமீரகத்தின் தொழிலதிபர் பால ஸ்கந்தன் தெரிவித்துள்ளார் …
ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் , மேற்கு ஆசியாவின் பிரம்மாண்ட இந்து கோயில் கோயில் அமைக்கும் பணியில் தங்களது நிறுவனம் ஈடுபட்டது மிக பெரிய “மைல் கல்” யென கேபிடல் என்ஜினியரிங் கன்செல்டென்சி தலைவர் பால ஸ்கந்தன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் உலக வர்த்தக மையத்தில் தமிழ் பொறியாளர்கள் அமைப்பின் சார்ப்பில் இரண்டு மாநாடு நடைபெற்றது வருகிறது.
இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பால ஸ்கந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில் எப்படிபட்ட சவாலான கட்டுமான பணியை தங்களது நிறுவனம் செய்து முடிப்பதோடு,
குறித்த நேரத்தில் செய்து முடித்து தருவதில் வளைகுடாவில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது என்றார்.
அமீரகத்தில் எதியாட் ரயில்வே ஸ்டேஷன்,கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நடைமுறை படுத்தவதில் மிக பெரிய சவாலாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து முடித்து உள்ளோம் என்றார்.
பால ஸ்கந்தன்
நிறுவன தலைவர்
கேபிடல் என்ஜினியரிங் கன்செல்டென்சி
தமிழ் நாட்டிலிருந்து பொறியாளர்களை தேர்வு செய்து திறன் வாய்ந்தவர்களாக மாற்றி உலக அளவில் பல திட்டங்களில் பணியமர்த்தி உள்ளது என்றார்.