ZEE5 இல் வெளியான “மாமன்” திரைப்படம், அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான, நடிகர் சூரி நடித்த “மாமன்” திரைப்படம், வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும் மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது. பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில், இன்பா (சூரி), மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது. மொத்த குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை, குடும்ப உறவுகள் எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. “மாமன்” குடும்பத்தோடு இணைந்து அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய அழகான படம்.

மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், ZEE5 இல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுக்க , டிஜிட்டல் பிரீமியர் செய்யப்பட்டது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, இந்த பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படம், மக்களின் பேராதரவைப் பெற்று வெளியான வேகத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் “மாமன்” திரைப்படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்த்துள்ளது.

ZEE5 தமிழ் பாரவையாளர்களுகென தொடர்ந்து தனித்துவமான சிறப்பான படைப்புகளை பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான “சட்டமும் நீதியும்” சீரிஸ் மக்களின் பேராதாரவைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. தற்போது சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

“மாமன்” திரைப்படத்தை ZEE5 தளத்தில் பிரத்தியேகமாக கண்டுகளியுங்கள்!.

Comments (0)
Add Comment