ரக்ஷிதாவின் சகோதரர் ராண்ணா கலக்கும் ‘ஏழுமலை’ டைட்டில் டீசர் வெளியானது !

தயாரிப்பாளர் தருண் கிஷோர் சுதீர் தயாரிப்பில், புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஏழுமலை’ படத்தின் தலைப்பு டீசர், பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. கருநாடா சக்ரவர்த்தி சிவண்ணா (சிவராஜ்குமார்) இந்த டீசரை வெளியிட்டு, படக்குழுவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இயக்குநர் ஜோகி பிரேம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, படம் வெற்றிகரமாக அமைய தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அற்புதமான  காதல் கதையாக உருவாகும் இப்படத்தில்,  ரக்ஷிதாவின் தம்பி ராண்ணா மற்றும் ‘மகாநதி’ புகழ் பிரியங்கா ஆச்சார் ஜோடியாக நடிக்கின்றனர்.
இப்படவிழாவில் சிவராஜ்குமார்  கூறியதாவது..,
“இந்த டீசர் அருமையாக இருக்கிறது. நல்ல விஷயங்கள் நல்லவர்களுக்கே நடக்கின்றன என்பதற்கு இது ஒரு சாட்சி. ராண்ணா மிகவும் ஹேண்ட்சமாக இருக்கிறார். பிரியங்காவைப் பார்க்க  ஒரு புதியவரைப் போலத் தெரியவில்லை. புதியவர்கள் வந்து சினிமாவை மாற்றவேண்டும். மக்கள் பாராட்டினால் லாபம் தானாக வரும். அது தான் எப்போதும் நடந்து வருகிறது. இப்படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள்”
இயக்குநர் ஜோகி பிரேம் கூறியதாவது..,
“ஜோகி படப்பிடிப்பில்  தான் அப்பாஜியுடன் நெருக்கமாகப் பழகினேன். அவர் எப்போதும் சினிமாவில் வரும் புதியவர்களை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்வார். சிவண்ணா இப்படத்தின் டீசரை வெளியிட்டது  பெருமை.”
தயாரிப்பாளர் தருண் சுதீர் கூறியதாவது..,
“சிவண்ணா மற்றும் பிரேம் சார் இருவருமே ‘ஏழுமலை’ நகரம் மற்றும் மலேமஹாதேஷ்வரர் கோயிலையும் கதை வழியாக அழகாக சொல்வதற்குச் சிறந்தவர்கள். இப்படத்தின் டைட்டில் டீசரை சிவண்ணா வெளியிட்டது ஒரு ஆசீர்வாதம். சினிமா என்பது ஒரு தங்க சுரங்கம் மாதிரி. சிலர் விரைவில் தங்கம் கண்டுபிடிக்கிறார்கள், சிலர் தாமதமாக. ஆனால் அங்கே நிச்சயமாகத் தங்கம் இருக்கிறது. அந்த தங்கம் நம்முடைய கன்னட சினிமாதான்!”
இயக்குநர் புனித் ரங்கசாமி கூறியதாவது..,
இது ஒரு அழகான காதல் கதை, உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த உணர்வுகள் டீசரிலேயே அழகாக வெளிப்பட்டுள்ளது.
கேரளா, தமிழ்நாடு எல்லைப் பகுதிகள், சாமராஜநகர், சேலம், ஈரோடு போன்ற இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்:
ராண்ணா, பிரியங்கா ஆச்சார்
ஜகபதி பாபு, நாகபரணா, கிஷோர் குமார், சர்தார் சத்யா, ஜகப்பா
தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு : அத்வைதா குருமூர்த்தி
படத்தொகுப்பு : கே.எம். பிரகாஷ்
இசை : டி. இமான்
வசனங்கள் : நாகர்ஜுனா சர்மா, புனித் ரங்கசாமி
இணை தயாரிப்பாளர்: அட்லாண்டா நாகேந்திரா
இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இப்படத்தின்
ஆடியோ உரிமையை மிகப்பெரிய விலைக்கு  ‘ஆனந்த் ஆடியோ’ நிறுவனம் பெற்றுள்ளது.
Comments (0)
Add Comment