தமிழ் ரசிகர்களின் சொந்த திரைக்கு பெரிய படங்களை கொண்டு வரும் டென்ட் கொட்டா

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ தற்போது ஸ்ட்ரீம் ஆகும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது

அமெரிக்காவில் இந்திய திரைப்படங்களை கண்டு மகிழ்வதற்கான முன்னணி ஓடிடி தளமான டென்ட் கொட்டா சமீபத்தில் இந்தியாவில் கால் பதித்து தமிழ் படங்களை ரசிகர்களின் சொந்த திரைகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று பாராட்டுகளை குவித்த ‘வணங்கான்’ திரைப்படத்தை டென்ட் கொட்டா தளத்தில் தற்போது ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

இதைத் தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது.

தரமான பொழுதுபோக்கை தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு வரும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக ‘ராஜாகிளி’ மற்றும் ‘காதல் என்பது பொதுவுடைமை’ படங்களை இந்த வாரம் ஓடிடியில் டென்ட் கொட்டா வெளியிடுகிறது.

மேலும், ‘ஃபயர்’, ‘ஜென்டில்வுமன்’, ‘தினசரி’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’ உள்ளிட்ட திரைப்படங்களை டென்ட் கொட்டா விரைவில் ஓடிடியில் வெளியிட்டு தனது சந்தாதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவுள்ளது. இன்னும் பல்வேறு படங்களும் டென்ட் கொட்டா தளத்தில் தொடர்ந்து வெளியாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, www.tentkotta.com என்ற இணையதளத்தை பார்க்கவும் அல்லது டென்ட் கொட்டாவின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடரவும்.

Comments (0)
Add Comment