சர்வதேச மகளிர் தினத்தில், Hushpurr நிறுவனம் சார்பில் பெண்களுக்கான சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் Walkathan நிகழ்ச்சியை திரு.பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ் மற்றும் திரு. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சென்னை பெசன்ட் நகர், ஆல்காட் பள்ளியருகே தொடங்கிய இந்த வாக்கத்தானை HUSHPURR , ஹெராவி பிங்க் ஸ்டோர் பிரைவேட் லிமிடெட் மற்றும் லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து நடத்தின.

மகளிர் தினத்தை ஒட்டி, மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட வாக்கத்தானில் ஶ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மார்பக புற்று நோயின் அறிகுறிகளைக் கண்டறியும் மெமொகிராஃபிக் பரிசோதனை இலவசமாக செய்யபட்டன.

மேலும் மகளிருக்கு ஆரம்பகால மருத்துவ சேவைக்கான சுகாதார அட்டைகள் பெண் நலம் அமைப்பு மூலம் வழங்கப்பட்டன.

அதேபோல ஶ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டவர்களுக்குபொது சுகாதார பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பெண்கள் தின வாக்கத்தானின் முக்கிய அம்சமாக, “HUSHPURR” நிறுவனத்தின் பெண்கள் நலம் பேணும் தனித்துவமான மற்றும் பிரத்யேகமான 5 தயாரிப்புகள் புகழ்பெற்ற மருத்துவர்களால் வெளியிடப்பட்டது.

இந்த தயாரிப்புகள் பெண்கள் நலனை மிகவும் நெருக்கமான மறுவரையரைகளால் சீர் செய்கிறது. குறிப்பாக பருவமடையும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முதல் கருத்தரிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வரை, சரும பாதுகாப்பு முதல் கேச பராமரிப்பு வரை பெண்கள் வெளியில் சொல்ல தயங்கும் பல்வேறு சிக்கல்களுக்கு HUSHPURR தயாரிப்புகள் சிறந்த நிவாரணியாக செயல்படுகின்றன.

Comments (0)
Add Comment