‘வேம்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் ‘மெட்ராஸ்’ , ‘தங்கலான்’, கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மணிகண்டன் முரளி இசை அமைத்துள்ளார். குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சீனுராமசாமி, தங்கர்பச்சான் , நித்திலன் சாமிநாதன், மடோன் அஷ்வின், நடிகர் யோகிபாபு, நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இப்படம் குறித்து அதன் இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறுகையில்,

“பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதையும்…

எப்பொழுதும் காவல்துறையோ, அரசாங்கமோ, தனிப்பட்ட நபரோ பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாத இக்கட்டான சூழலில், ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது எப்படி துணிச்சலாக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தையும் இந்தப்படம் சொல்கிறது.

ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தும் விதமாக சமூக பொறுப்புடன் கூடிய ஒரு சரியான படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

சிறந்த கதை அம்சம்கொண்ட யதார்த்தமான திரைப்படங்களை மக்கள் வெற்றி பெறச் செய்து வருகின்றனர். அது போன்ற யதார்த்த சினிமாக்களின் வரிசையில் இதுவும் இருக்கும்” என்கிறார்.

Comments (0)
Add Comment