நம் வாழ்வின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. சில சோதனைகள் உங்கள் தைரியம், உங்கள் கனவுகள் மற்றும் உங்கள் தியாகங்களை சோதிக்கும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது.
கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் ‘டெஸ்ட்’. இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
துணிச்சலான மற்றும் அழுத்தமான கதைகளைத் தயாரித்த ‘YNOT’ ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இது பற்றி இயக்குநர் சஷிகாந்த் பகிர்ந்து கொண்டதாவது, “பல ஆண்டுகளாக ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களைத் தயாரித்துவிட்டு தற்போது ‘டெஸ்ட்’ படத்திற்காக இயக்குநர் நாற்காலியில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியாகவும் தனிப்பட்ட முறையில் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்தத் திரைப்படம் பல உணர்வுகள், சூழ்நிலைகளின் முடிவு, வாழ்க்கை எப்படி அனைவருக்கும் சில சோதனைகளைத் தருகிறது என்பதைத்தான் ‘டெஸ்ட்’ பேச இருக்கிறது. ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகிய மூவரும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருப்பது ஸ்பெஷலான விஷயம். இந்த கதையை சாத்தியமாக்கிய ‘YNOT’ ஸ்டுடியோஸ், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் எனது அணிக்கும் நன்றி. ஏப்ரல் 4 முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ படம் ப்ரீமியர் ஆகிறது” என்றார்.
நெட்ஃபிலிக்ஸ் கண்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட், மோனிகா ஷெர்கில் பேசியதாவது, “2025 ஆம் ஆண்டில் எங்கள் முதல் தமிழ் திரைப்படம் ‘டெஸ்ட்’. நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அழுத்தமான த்ரில்லர் கதையாக இது உருவாகி இருக்கிறது. கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட கதை இது. ஒரு தேசிய அளவிலான கிரிக்கெட் பிளேயர், ஒரு விஞ்ஞானி மற்றும் ஆர்வமுடைய ஆசிரியர் ஒருவர் ஆகியோரின் வாழ்க்கையை சுற்றி வருகிறது. அவர்களின் லட்சியம், தியாகம் மற்றும் தைரியத்தை சோதிக்கும் உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டராக கதை இருக்கும். இயக்குநர் எஸ். சஷிகாந்த் இந்தக் கதையை கடைசி நிமிடம் வரை பார்வையாளர்களைக் கட்டிப் போடும் வகையில் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு ‘டெஸ்ட்’ படத்தைக் கொண்டு சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளோம்” என்றார்.
விளையாட்டில் ஒரு முடிவும் தருணமும் மறக்க முடியாதது. ஒரு கணம், ஒரு தேர்வு – அதுதான் ஹீரோவாகவோ வில்லனாகவோ மாற்றும். இந்தத் திரைப்படம் விளையாட்டைப் பற்றியது மட்டுமல்ல, வாழ்க்கை உங்களை நோக்கி வீசும் சோதனைகளையும் பற்றியது.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: எஸ்.சஷிகாந்த்,
தயாரிப்பாளர்: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் (YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பு)
நடிகர்கள்: ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த்
நெட்ஃபிலிக்ஸ் பற்றி:
நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலுத்தும் உறுப்பினர்களுடன் டிவி தொடர்கள், படங்கள் மற்றும் கேம்களை பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் வழங்கி வருகிறது.
உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம், நிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கத் தொடங்கலாம்.