இப்படத்துக்கு கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ் மோகன், வசனம் சேத்து மற்றும் ராஜாமணி ஒளிப்பதிவு மணிகண்டன் இசை ஏகே ஆல்ரின் படத்தொகுப்பு ராஜேந்திர சோழன் சண்டை பயிற்சி இடி மின்னல் இளங்கோ நடனம் ரேவதி பாலகுமாரன்
இப்படத்தில் நாயகனாக புதுமுகம் எம். நாகரத்தினம் நடிக்க நாயகியாக இலக்கியா நடித்துள்ளார் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன் ,சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி ஆகியோர் நடித்துள்ளனர்
இப்படத்தைப் பற்றி இயக்குனர் மோகன் கூறுகையில்..
இப்படம் முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ளது
நரசிம்மன் முத்தையா நண்பர்கள் நரசிம்மனாக வரும் ரஜாகணபதி மண்ணை நேசிப்பவர் முத்தையா வரும் மொட்டை ராஜேந்திரன் மண்ணால் தனக்கு என்ன வருமானம் கிடைக்கும் என நினைப்பவர்..
என்னதான் நண்பர்கள் என்றாலும் அரசியல் என்று வரும்போது பகை உருவாகும் அல்லவா அப்படித்தான் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நிற்கும் நெருங்கிய நண்பர்களான நரசிம்மன் க்கும் முத்தையாக்கும் பகை உண்டாகிறது. இதில் எப்போதும் நரசிம்மன் தான் முத்தையாவை ஜெயிக்கிறார்.
தற்போது அதற்கு அடுத்த தலைமுறையாக
நரசிம்மன் மகன் வேலன்
முத்தையா மகன் சந்தோஷ்,
இருவரும் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள், அதே நேரத்தில் வேலன் வீட்டுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு தொழிலாளியாக வள்ளி வருகிறாள் அப்போது வேலனுக்கும் வள்ளிக்கும் காதல் ஏற்படுகிறது..
இந்த காதலை முறியடிக்க முத்தையாவும் அவரது மகன் சந்தோஷும் திட்டம் தீட்டுகிறார்கள் அதிலிருந்து மீண்டு எப்படி வேலன் வள்ளி மயிலை திருமணம் செய்தான் என்பதுதான் படத்தின் கதை
இந்தப் படம் வள்ளி மலையை சுற்றி உள்ள பைவலசை தேவலாபுரம் ,ஏகாம்பர நல்லூர் ,புதூர் மேடு பொன்னை செங்கட்டானூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நடை பெற்று முடிவடைந்துள்ளது.
தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.