Chennai, 9th Feb 2025 : வாய் சுத்த பராமரிப்புத்துறையில் ஆயுர்வேதத் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான டாபர், தென்னிந்தியாவில் மாபெரும் பல் சுத்த பராமரிப்பு இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. அதனடி இந்திய பல் மருத்துவ சங்கத்துடன் (IDA) இணைந்து பல் மருத்துவ முகாம்களைத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான பல் மருத்துவ மாநாட்டில் இவ்வியக்கம் குறித்து முறையாக அறிவிக்கப்பட்டது. ‘மாற்றத்தை நோக்கி பல் மருத்துவம்: புதுமை செய், ஒன்றுசேர், மேலோங்கு’ – என்பதே இவ்வாண்டு மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.
தென்னிந்தியா, டாபரின் முக்கியமான சந்தை ஆகும். டாபர் சிவப்பு பற்பசை, தமிழ்நாட்டிலும் ஆந்திரப் பிரதேசத்திலும் பல் பராமரிப்பு சந்தையில் முதலிடம் வகிக்கிறது. அதேபோல கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் வலுவான இடத்தைப் பிடித்திருக்கிறது.
வாய்ச்சுத்த பராமரிப்பிலும் சமூக நலத்திலும் அக்கறை கொண்ட டாபர், பிராந்திய அளவிலான சந்தையின் தேவைகளையும் உள் வாங்கி, தனது செயல்பாடுகளை விரிவாக்கிவருகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான பல் மருத்துவ மாநாட்டில் ஓர் அனுபவக் கலந்துரையாடல் நிகழ்வை டாபர் ஏற்பாடு செய்திருந்தது. அங்கு ஆயுர்வேதத்தையும் நவீன மருத்துவ அறிவியலையும் எவ்வாறு வாய் சுத்த பராமரிப்புக்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்திய பல் மருத்துவ சங்கத்துடன் இணைந்து உள்ளூர் பல் மருத்துவர்களுடன் கைகோர்த்து வாய் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு எவ்வாறு ஆயுர்வேதம் மூலம் தீர்வு காணலாம் என்பதை எடுத்துக்காட்ட டாபர் தொடர்ந்து முனைகிறது.
அச்சங்கத்துடன் இணைந்து இப்பகுதி முழுவதும் இலவச பல் மருத்துவ முகாம்களை நடத்துவதுடன் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு பல் பராமரிப்பு குறித்த வழிகாட்டுதலையும் வழங்க இருக்கிறது. மேலும், அவ்வமைபுடன் இணைந்து, பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் மற்றும் அமைப்புகள் வாயிலாக இத்தகைய முகாம்களை நடத்த இருக்கிறது. இதன் மூலம் வாய் சுகாதாரம் தொடர்பான சேவை விரிவான அளவுக்கு மக்களை சென்றடையும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் பினித் குமார், டாபர் நிறுவனத்தின் தென்னிந்திய வணிக விரிவாக்கத் திட்டங்களை வலியுறுத்திப் பேசினார்.
“மருத்துவ ரீதியில் நிருபிக்கப்பட்ட ஏழு பயன்களை கொண்ட டாபர் சிவப்பு பற்பசையை நாட்டின் தலைசிறந்த (நம்பர் ஒன்) ஆயுர்வேத பற்பசையாக இந்திய பல் மருத்துவ சங்கம் அங்கீகரித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அங்கீகாரம், எங்களது வாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்புகளின்மீது கொண்டுள்ள நம்பிக்கை, அன்பின் பிரதிபலிப்பு ஆகும். இந்நிலையில் பல் மருத்துவ சமூகத்துடன் எங்களது கூட்டுறவை வலுப்படுத்தவும் பல் பராமரிப்புக்காக மருத்துவ ரீதியில் நிருபிக்கப்பட்ட ஆயுர்வேத தயாரிப்பு பயன்பாட்டை ஊக்குவிக்கவும் செயல்பட உள்ளோம்” என்றார்.
மேலும் அவர், “ அண்மையில் தமிழகத்தில் டாபர் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம். இது தென்னகத்தில் எங்களது கரத்தை மேலும் பலப்படுத்தும். அதிகரித்து வரும் டாபர் பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டும் இந்த உற்பத்திப் பிரிவு தொடங்கப்படவில்லை. மாறாக, எதிர்காலத்தில் பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகளைக் கொண்டு வரவும் சமூகப் பணி சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்ளவும்தான் இது தொடங்கப்படுகிறது” என்றார் அவர்.
டாபரின் புதிய முயற்சிகள் குறித்துப் பேசிய அவர், ”அண்மையில் குழந்தைகளுக்காக நஞ்சற்ற (தீமை செய்யும் பொருட்கள் இல்லாத) ஆயுர்வேத பற்பசையை இரண்டு நறுமணங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அடுத்த கட்டமாக வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்து பல்வேறு புதிய வகைப் பற்பசைகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம்” என்றார்.
வியூக ரீதியிலான முதலீடுகள், புதுமையான தயாரிப்புகள், சமூகம்சார் செயல்பாடுகள் ஆகியவற்றின்மூலமாக டாபர் நிறுவனம் ஒட்டுமொத்த வாய் சுகாதாரம், நல வாழ்வு ஆகியவற்றை தென்னிந்தியாவுக்கு வழங்க உறுதிபூண்டு நடைபோட்டு வருகிறது.