சி. எஸ். ராவ் நூற்றாண்டு விழாவில் என். ஜி. எல். டிரஸ்ட் மூலம் இசை அறிஞர் ஸ்ரீ. வி. ஏ. கே. ரங்கா ராவ் அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படப்பட்டது.
சி. எஸ். ராவ் 100 இந்திய திரைப்பட உலகின் மாமேதை, பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஸ்ரீ. சித்தஜல்லு ஸ்ரீனிவாச ராவ் அவர்களின் 100ஆம் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் நாளாக அமைந்துள்ளது.
தெலுங்கு திரைப்பட துறையின் புகழ்பெற்ற இயக்குனர் ஸ்ரீ. சித்தஜல்லு புல்லையாவின் மகனான சி. எஸ். ராவ், தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் மற்றும் ஓரியா போன்ற தென் இந்திய மொழிகளில் 65 திரைப்படங்களை இயக்கியவர். மேலும், அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிகராகவும் செயல்பட்டுள்ளார்.
இந்த நாளில், சி. எஸ். ராவ் அவர்களின் சினிமா பயணத்தை நினைவுகூர்ந்து, என். ஜி. எல். டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஸ்பாட்லைட், ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3234 இணைந்து விழாவை நடத்துகின்றன.
இந்த விழாவில் சி. எஸ். ராவ் அவர்களின் மகளான ஸ்ரீமதி தேவி கிருஷ்ணா, புகழ்மிகு திரைப்பட வரலாற்றாசிரியர், நடனக் கலைஞர் மற்றும் இசை அறிஞர் ஸ்ரீ. வி. ஏ. கே. ரங்கா ராவ் அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருதை வழங்கி பெருமையடைகின்றனர்.
ஸ்ரீ. வி. ஏ. கே. ரங்கா ராவ் 53,000 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் உள்ள 78 ஆர்.பி.எம். கிராமஃபோன் பாடல்களை கொண்டிருக்கும் சாதனை படைத்தவர்.
இதில் பல்வேறு திரைப்பிரபலங்கள், ரோட்டேரியன்கள் மற்றும் என். ஜி. எல். டிரஸ்ட் குடும்பத்தினர் பங்கேற்றனர்.