துபாய் விசாவுக்கு என்னென்ன தேவை… விளக்குகிறார் பவித்ரா செலின்

ஐக்கிய அரபு நகரங்களில் ஒன்றான துபாயில் இந்தியர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனா். வேலை, சுற்றுலா உள்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் பலரும் துபாய்க்கு அடிக்கடி சென்று வருகின்றனா். இந்த நிலையில் துபாய் செல்வதற்கு முக்கியமான விசாவை பெறுவதில் இந்தியர்களுக்கு பல சிக்கல்கள் சமுக வலைதளங்களில் பரப்ப பட்டு வந்தாலும் சரியான வகையில் இருக்கும் விண்ணப்பங்கள் ஏற்க பட்டு விசா வழங்க பட்டு வருவதாக துபாயின் பிரபல விசா ஏற்பட்டாளர் தொழில் நிறுவனங்களை பதிவு செய்யும் Enrich ventures நிறுவனத்தின் CEO பவித்ரா செலின் தெரிவித்துள்ளார்.

துபாயில் நமதுNBA 24×7 நியூஸ் ஏஜென்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில்
முன்பு போல் இல்லாமால் துபாய் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சரியான ஆவணங்களையும் திரும்ப வருவதற்கான் விமான டிக்கெட்,தங்குமிடம் விவரம் ,செலவுக்கு பணம் ஆகியவை காட்டினாலே கிடைத்துவிடும் என்றார்.

புதிய விதிகளின் கீழ் யூஏஇ துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகள், தங்கள் தங்க உள்ள ஓட்டல் முன்பதிவு தகவல்கள் மற்றும் இந்தியா திரும்பும் டிக்கெட் ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தியர்கள் பலரது விசா விண்ணப்பங்கள் அதிரடியாக நிராகரிக்கப்பட்டது. இதற்கு காரணம் அவர்கள் துபாயில் தங்கும் விடுதி அல்லது ரிட்டன் டிக்கெட் நகலை சமர்ப்பிக்காதது என்றே கூறப்படுகிறது.
கார்டு)
((துபாய் விசிட் விசா பெற என்ன செய்ய‌‌வேண்டும்))
((கண்டிப்பாக செல்லத்தக்க விமான ரிட்டன்‌ டிக்கெட் அவசியம்))
((தங்குமிடம் ,ஹோட்டல்கள் பதிவு செய்த விவரங்கள் சமர்பிக்க பட வேண்டும்))
((செலவிற்கான தேவையான தொகை இருப்பை வங்கி கணக்கில் இருத்தல் அவசியம்))

Enrich venturesMiddleEastMiddleEast uaePavithra Celine TrinidadValueMedia MiddleEast uae
Comments (0)
Add Comment