முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

18

காரப்பாக்கத்தில் உள்ள கே சி ஜி டெக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் டி ஜெ ஸ்ரீனிவாச ராஜ் துவங்கி வைத்தார். அருகில் போட்டி அமைப்புக்குழு துணைத் தலைவரும் முன்னாள் சர்வதேச கால்பந்து வீரருமான சிவராமன் இருக்கிறார்.

 

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (எம்.ஒய்.ஏ.எஸ்.), இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சம்மேளனத்துடன் (டி.பி.சி.எப்.ஐ.) இணைக்கப்பட்ட தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் (டி.என்.டி.பி.சி.ஏ.) இப்போட்டியை ஒருங்கிணைக்கிறது.

இப்போட்டியில் மொத்தம் 13 நாடுகள் கலந்து கொள்கின்றன:
இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வங்காளதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு, பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யூ.ஏ.இ.) குவைத் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.